Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Messi: இத்தனை லட்சமா.. மெஸ்ஸியின் வளர்ப்பு நாய் ”ஹல்க்” தொடக்க விலை என்ன? அப்படி என்ன ஸ்பெஷல்?

மும்பை: அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி வளர்த்து வரும் செல்லப்பிராணியான "ஹல்க்" நாய்-ன் செயல்பாடுகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் மெஸ்ஸி வளர்த்து வரும் நாயின் தொடக்க விலை குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கால்பந்து விளையாட்டில் அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். ஃபிஃபா யு20 உலகக்கோப்பை, லா லிகா, சாம்பியன்ஸ் லீக், கோபா அமெரிக்கா, கோபா டெல் ரே, ஒலிம்பிக்ஸ், உலகக்கோப்பை என்று 44 கோப்பைகளை வென்றுள்ள அவர், அர்ஜென்டினாவுக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையுடன் இருக்கிறார்.

lionel messi argentina dog

லயோனல் மெஸ்ஸி எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருகிறாரோ, அதே அளவிற்கு மெஸ்ஸி வளர்த்து வரும் செல்லப் பிராணியான பிரெஞ்ச் மஸ்டிஃப் நாயும் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. மெஸ்ஸி அவர் நாயுடன் விளையாடும் ஒவ்வொரு வீடியோவும் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. மெஸ்ஸி வளர்த்து வரும் நாயான பிரெஞ்ச் மஸ்டிஃப், அதன் உருவம் மற்றும் வலிமையால் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாய்-க்கு மெஸ்ஸி "ஹல்க்" என்று பெயரிட்டுள்ளார். பெயருக்கு ஏற்றபடி உருவமும், வலிமையும் இருப்பதால், ரசிகர்கள் சரியான பெயர் என்று கூறி வருகின்றனர். செந்நிறத்தில் மெஸ்ஸியுடன் கால்பந்து விளையாடும் பிரெஞ்ச் மஸ்டிஃப் "ஹல்க்"கின் தொடக்க விலை மட்டும் சுமார் ரூ.1.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அந்த நாயின் வளர்ப்புக்கு மட்டும் மாதம் குறைந்தது ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை வரும்.

மொத்தமாக உணவு, மருத்துவம், வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை கணிக்கிட்டு பார்க்கும் போது அந்த நாய்-க்கு மட்டும் வாழ்நாளில் ரூ.17 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது மியாமியில் வசித்து வரும் மெஸ்ஸியின் குடும்பத்தினர், சில மருத்துவ பிரச்சனைகள் வரக் கூடாது என்பதற்காக "ஹல்க்"கை பார்சிலோனாவிலேயே தங்க வைத்துள்ளனர். இந்த நாயின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.

மெஸ்ஸியின் நாய்-க்கு 7 வயதாகி இருப்பதால், இடம்பெயர்ந்தால் இருதய நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பார்சிலோனாவிலேயே ஹல்க் இருப்பதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். பெரும்பாலும் பிரெஞ்ச் மஸ்டிஃப் நாய் வீட்டுக் காவலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1989ஆம் ஆண்டு டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளியான டர்னர் அண்ட் ஹீச் படத்தின் மூலமாக இந்த வகையான நாய் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 11, 2024, 8:51 [IST]
Other articles published on Sep 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+