Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆமா.. நான் செஞ்சது பிரியாணியேதான்.. நம்பிருங்கப்பா ப்ளீஸ்.. கலகலக்கும் லிசா

சிட்னி: முன்னாள் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் கேப்டன் லிசா ஸ்தலேகர் தோசைக்கு அடுத்தபடியாக பிரியாணி செய்துள்ளார். அதாவது வெஜிட்டேரியன் பிரியாணி. ஆனால் கலர் சரியாக வரவில்லை என்று சோகமாகி விட்டார்.

மகளிர் கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு பெயர்தான் லிசா ஸ்தலேகர். ஆஸ்திரேலிய கேப்டனாக வலம் வந்தவர். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பெண். ஓய்வுக்குப் பின்னர் கமெண்டரியில் குதித்தார்.

தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் போனதால் தனது வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் லிசா, சாப்பாட்டில் இறங்கி விட்டார். அதாவது சமையலில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக இந்திய உணவு வகைகளை செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

லிசாவின் தோசை

லிசாவின் தோசை

லிசா ஸ்தலேகர் சில தினங்களுக்கு முன்பு தோசை செய்து சாப்பிட்டார். கூடவே சாம்பாரும் தேங்காய் சட்னியும் வைத்து அதன் போட்டோ போட்டே நம்மையும் ஜொள்ளு விட வைத்தார். இப்போது பிரியாணிக்கு மாறி விட்டார். அதுவும் வெஜிட்டேரியன் பிரியாணி. என்ன சமைக்கலாம் என்று யோசித்து வெஜிட்டேரியன் பிரியாணி செய்தேன். எப்படி இருக்கு பாருங்க என்று கேட்டுள்ளார்.

இப்போது பிரியாணி

இப்போது பிரியாணி

மேலும் இந்த பிரியாணிக்கும் பக்கத்துல ஒரு படத்துல இருக்கே இன்னொரு பிரியாணி, அதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்தக் கலர் என்னோட பிரியாணியில் வரலை.. ஏன்னு தெரியலை.. யாராச்சும் டிப்ஸ் சொல்லுங்களேன் என்று கேட்டுள்ளார். அதாவது வெஜிட்டேரியன் பிரியாணிதான் செய்துள்ளார் லிசா.. ஆனால் அவர் நினைத்த மாதிரி அது வரலை.. அதனால் லைட்டா சோகமாயிட்டார்.

ஆச்சரியப்பட்ட நண்பர்கள்

ஆச்சரியப்பட்ட நண்பர்கள்

இருப்பினும் அவரது நண்பர்கள் விதம் விதமாக படம் போட்டு இப்படித்தான் செய்யணும் என்று அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அடடே இத்தனை வகை பிரியாணி இருக்கா என்று லிசாவே ஆச்சரியப்பட்டுப் போய் விட்டார் அதைப்பார்த்து. அனேகமாக அடுத்த முறை அவர் வெஜிட்டேரியன் பிரியாணி செய்ய முயற்சிக்கும்போது அது கண்டிப்பாக அதே வெஜிட்டேரியன் பிரியாணியாகவே வரும் என்று நம்பலாம்.

சூப்பர் கமெண்ட் போட்ட படேல்

சூப்பர் கமெண்ட் போட்ட படேல்

இதில் என்ன விசேஷம் என்றால் இந்த பிரியாணியைப் பார்த்த மொச்சைக் கொட்ட பல்லழகன் என்று புகழப்படும் நம்ம கமண்ட்டேட்டர் ஹர்ஷா படேல், இது மக்களைக் குறிக்கிறது. நல்லவர்களுக்கு கலர் இருக்காது. கெட்டவர்கள்தான் விதம் விதமான கலரில் வருவார்கள். அது போலத்தான் உங்க பிரியாணியும் என்று கூறி லிசாவை மெய் சிலிர்க்க வைத்து விட்டார். வடிவேலு சொல்ற மாதிரி பல்லு பொடப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்கத் தோணும் போல.

Story first published: Thursday, April 23, 2020, 19:46 [IST]
Other articles published on Apr 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+