
முதலில் மசாலா தோசை
அடுக்கி வைத்த பொருட்களிலிருந்து அவர் செய்த முதல் டிஷ் என்ன தெரியுமா.. மசாலா தோசை. பல வருடத்திற்குப் பிறகு இந்த தோசையைச் செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். தொட்டுக்க தேங்காய் சட்னி வேறு அரைத்து வைத்து தோசை, சாம்பார் பிளஸ் தேங்காய் சட்னியுடன் போட்டோவும் போட்டிருந்தார். பலரும் இதை வரவேற்று ஆச்சரியப்பட்டு பாராட்டியிருந்தனர். லிசாவுக்கே இது ஆச்சரியம்தான் போல.

லிசா சுட்ட ஊத்தப்பம்
அடுத்து இப்போது ஊத்தப்பத்திற்குத் தாவியுள்ளார். ஊத்தப்பம் படு வித்தியாசமான சைசில் இருக்கிறது. வழக்கமாக நம்ம ஊர்களில் ஊத்தப்பம் வட்டமாகத்தான் இருக்கும். இது வட்டமும் இல்லாமல் நீளமும் இல்லாமல் அகலமும் இல்லாமல் புதுவிதமான தினுசில் இருக்கிறது. இருந்தாலும் ஊத்தப்பம் போலவே இருக்கிறது என்பதுதான் இதில் ஆறுதல்.

சைஸ்தான் வித்தியாசமா இருக்கு
ஊத்தப்பம் உண்மையிலேயே நல்லாத்தான் இருக்கு. ஒரு பக்கம் பார்த்தா பெரிய சைஸ் ஆம்லேட் போல இருக்கு.. இன்னொரு பக்கம் பார்த்தால் பெரிய குண்டு தோசை போல இருக்கு. இருந்தாலும் இதை ஊத்தப்பம்னு இப்போதைக்கு ஒத்துக்குவோம். கஷ்டப்பட்டு லிசா போட்ட ஊத்தப்பமாச்சே.. சைட் டிஷ் என்ன தெரியுமா.. நேத்து வச்ச சாம்பாரும், தேங்காய் சட்னியும் என்று சொல்லியுள்ளார் லிசா. அதாவது சாம்பாரை சுட வச்சு சாப்பிட்டிருக்கார்.

இட்லி இடியாப்பம் பாயா
லிசா போற வேகத்தைப் பார்த்தால் அடுத்து இட்லி, இடியாப்பம், ஆப்பம் என்று கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. லாக்டவுன் ஆஸ்திரேலியாவிலும் நீடித்துக் கொண்டே போவதால் அனேகமாக புட்டு வரைக்கும் சுட்டு லிசா ஒரு கை பார்ப்பார் என்று நம்பலாம். இருந்தாலும் லிசாவின் ஆர்வத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். சும்மா ரொட்டி சுட்டு சாப்பிடாமல் கஷ்டப்பட்டு தோசை, ஊத்தப்பம் என்று கலக்குகிறாரே.


Click it and Unblock the Notifications