Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேச்சிலர் கோஹ்லி டூ புது மாப்பிள்ளை கோஹ்லி... 2017ல் இவர் செய்த சாதனைகள் என்ன தெரியுமா?

டெல்லி: 2017ல் மட்டும் கோஹ்லி பல முக்கிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். கிரிக்கெட் உலகில் யாரும் செய்யாத சாதனைகளை இவர் இந்த ஒரே வருடத்தில் செய்துள்ளார்.

அடுத்த சச்சின் என்று புகழப்படும் கோஹ்லி ''நான் சச்சின் இல்லை அதற்கும் மேல்'' என்று இந்த ஒரே வருடத்தில் நிரூபித்து விட்டார். இந்த வருடம் கோஹ்லி காட்டில் ரன் மழை, சாதனை சூறாவளி, செஞ்சுரி சுனாமி அடித்தது என்று கூட சொல்லலாம்.

இந்த வருட இறுதியில் கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்காத ஒரு ஷாக்கிங் சர்ப்ரைஸை அனைவருக்கும் கொடுத்து கோஹ்லி கலக்கியதும் குறிப்பிடத்தக்கது.

லாரா செய்த சாதனை

லாரா செய்த சாதனை

இந்த வருடம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோஹ்லி இரண்டு சதம் அடித்தார். ஒரே தொடரில் இரண்டு சதம் அடித்த இந்திய கேப்டன் இவர் மட்டுமே. மேலும் இதன் மூலம் கோஹ்லி 6 இரட்டை சதம் அடித்து இருக்கிறார். இதன் மூலம் இவர் பிரைன் லாராவின் 5 இரட்டை சத சாதனையை முறியடித்தார்.

சதம் சதம் சதம்

சதம் சதம் சதம்

கோஹ்லி இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை சேர்த்து 52 சதங்கள் அடித்து இருக்கிறார். ஒருநாள் போட்டியில் சச்சினின் 49 சதம் சாதனையை இவர் விரைவில் முறியடித்து விடுவார். இலங்கைக்கு எதிரான தொடரில் மூன்று டெஸ்டிலும் சதம் அடித்தார். இதனால் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் அனைத்து டெஸ்டுகளிலும் சதம் விளாசிய ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

டக் சாதனை

டக் சாதனை

அதே தொடரில் கோஹ்லி இன்னொரு சாதனையும் செய்தார். தொடர்ந்து 11 பந்துகள் விளையாடிய கோஹ்லி ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனார். 1983ல் 31 போட்டிகளில் 5 முறை கபில்தேவ் டக்அவுட்டாகியிருந்தார். இதன் மூலம், ஒரே வருடத்தில் அதிக முறை டக்அவுட்டான இந்திய கேப்டன்கள் வரிசையில் கபில் தேவை கோஹ்லி சமன் செய்துள்ளார்.

அதிவேகம்

அதிவேகம்

இந்த வருடம் அதிகமாக ரன் எடுத்த காரணத்தால் கோஹ்லி எளிதாக 9000 ரன்னை கடந்தார். இதனால் வேகமாக 9000 ரன் எடுத்த டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்தார். டிவில்லியர்ஸ் 205 போட்டிகளில் செய்த சாதனையை கோஹ்லி 202 போட்டிகளிலேயே முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோஹ்லிக்கு திருமணம்

கோஹ்லிக்கு திருமணம்

சாதனைகளால் எல்லோரையும் சந்தோசபடுத்திய கோஹ்லி சத்தமில்லாமல் இன்னொரு சர்ப்ரைஸும் கொடுத்துள்ளார். அதன்படி இந்த டிசம்பர் 11ம் தேதி கோஹ்லிக்கும் அவரது காதலி அனுஷ்கா சர்மாவிற்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணம் இத்தாலியில் நடந்தது. இதுவரை பேச்சிலராக கிரிக்கெட் களம் புகுந்த கோஹ்லி முதல்முறை குடும்பஸ்தனாக களம் இறங்க உள்ளார்.

Story first published: Tuesday, December 26, 2017, 14:43 [IST]
Other articles published on Dec 26, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+