Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாஹல், ஸ்மித், கோஹ்லி.. ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார்.. பட்டியல் இதோ!

சென்னை: ஐசிசி 2017ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. 2017ல் வீரர்கள் விளையாடிய விதத்தை வைத்து இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சிறந்த ஒருநாள் வீரராக கோஹ்லி தேர்வாகி உள்ளார். அதேபோல் சிறந்த டெஸ்ட் வீரர் பெயரும் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் சிறந்த நடுவர், இளம் வீரர், இணை வீரர் என நிறைய பேரின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு ஐசிசி டிவிட் செய்து மரியாதை செலுத்தி உள்ளது.

சிறந்த நடுவர்

ஐசிசியின் சிறந்த நடுவருக்கான விருது 'மாரெய்ஸ் எராஸ்முஸ்' என்பருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இவர் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஆவார். 2010ல் இருந்து நடுவராக செயல்பட்டு வருகிறார். 47 டெஸ்ட், 74 ஒருநாள், ஒரு சாம்பியன் கோப்பை, 26 டி-20 போட்டியில் இவர் நடுவராக இருந்துள்ளார். இரண்டாவது முறையாக இவர் இந்த விருதை வாங்குகிறார்.

டெஸ்ட் வீரர்

கோஹ்லி எப்படி ஒருநாள் போட்டிக்கோ அப்படித்தான் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் அணிக்கு. இவர் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருது வாங்கியுள்ளார். 16 டெஸ்ட் போட்டிகளில் இவர் 1875 ரன்களும் 8 சதங்களும், 5 அரை சதங்களும் அடித்துள்ளார்.

சாஹல்

டி-20 போட்டிக்கான சிறந்த வீரருக்கான விருதும் இந்திய வீரருக்குத்தான் கிடைத்து இருக்கிறது. இந்திய ஸ்பின் பவுலர் சாஹல் சிறந்த டி-20 வீரர் விருது பெற்றுள்ளார். பெங்களூரில் இங்கிலாந்திற்கு எதிராக இவர் எடுத்த 6/25 விக்கெட் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

வளர்ந்து வரும் வீரர்

சிறந்த வளரும் வீரர் விருது பாகிஸ்தானின் ஹசன் அலிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக இந்த விருது வாங்கியுள்ளார். அந்த கோப்பையில் இவர் தொடர் நாயகன் விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இணை வீரர்

கோஹ்லி எப்படி சிறந்த வீரர் விருது வாங்கினாரோ அதேபோல் இவர் சிறந்த இணை வீரர் விருது வாங்கி உள்ளார். ஆப்கானிஸ்தானின் 'குட்டி புலி' ரஷித் கான் இந்த விருதை வாங்கியுள்ளார். சென்ற வருடம் இவர் 60 விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார். 43 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் எடுத்து இருக்கிறார் இந்த ஆல் ரவுண்டர்.

Story first published: Thursday, January 18, 2018, 12:49 [IST]
Other articles published on Jan 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+