Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2018இல் டி20 போட்டிகளில் அறிமுகம் ஆன 4 இந்திய வீரர்கள்.. ஒருத்தர் மட்டும் தான் சூப்பர்

Recommended Video

ஐபிஎல் ஏலத்தை அதிரவைத்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி- வீடியோ

டெல்லி : 2018இல் டி20 போட்டிகளில் அறிமுகமான இந்திய வீரர்களை பற்றி பார்க்கலாம்.

2018ஆம் ஆண்டில் நான்கு இந்திய வீரர்கள் டி20 போட்டிகளில் அறிமுகம் ஆகி உள்ளார்கள்.

அந்த நான்கு வீரர்கள் - சித்தார்த் கௌல், கலீல் அஹ்மது, தீபக் சாஹர் மற்றும் க்ருனால் பண்டியா.

சித்தார்த் கௌல் எப்படி?

சித்தார்த் கௌல் எப்படி?

டுப்ளின் நகரில் நடைபெற்ற இந்தியா - அயர்லாந்து டி20 போட்டியில் தான் சித்தார்த் கௌல் அறிமுகம் ஆனார். அடுத்து இங்கிலாந்து டி20 தொடரில் ஒரே ஒரு போட்டியில் ஆடினார். பின்னர், ஒரு சில ஒருநாள் போட்டிகளில் ஆடியதோடு அவரது சர்வதேச கிரிக்கெட் வாய்ப்பு நின்று போயுள்ளது. 2 டி20 போட்டிகளில் ஆடிய சித்தார்த் 3 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

சூப்பர் கலீல் அஹ்மது

சூப்பர் கலீல் அஹ்மது

இந்த ஆண்டின் சிறந்த அறிமுக வீரர் யார் என்றால் அது கலீல் அஹ்மது தான். இளம் வயதில் சிறப்பாக பந்து வீசி வருகிறார் கலீல் அஹ்மது. இந்த ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டியில் அறிமுகம் ஆனார் கலீல். 6 டி20 போட்டிகளில் ஆடி 6 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

ராசியில்லாத தீபக் சாஹர்

ராசியில்லாத தீபக் சாஹர்

சித்தார்த் போலவே மற்றொரு ராசியில்லாத வீரர் தீபக் சாஹர். இங்கிலாந்து டி20 தொடரில் ஒரே ஒரு போட்டி ஆடும் வாய்ப்பு பெற்று தன் சர்வதேச டி20 அறிமுகத்தை பெற்றார் தீபக். அந்த போட்டியில் ஒரு விக்கெட் எடுத்தார். அதன் பின் ஆசிய கோப்பையில் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அதன் பின் வாய்ப்பின்றி இருக்கிறார் தீபக்.

க்ருனால் பண்டியா வாய்ப்பு

க்ருனால் பண்டியா வாய்ப்பு

இவரது சகோதரர் ஹர்திக் பண்டியா காயத்தில் இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரிலும், ஆஸ்திரேலிய டி20 தொடரிலும் ஆடும் வாய்ப்பை பெற்றார் க்ருனால். ஆறு டி20 போட்டிகளில் ஆடி 6 விக்கெட்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் மட்டும் 4 விக்கெட்கள் வீழ்த்தி நம்பிக்கை அளித்தார். எனினும், நம்பகமான வீரராக மாறவில்லை.

Story first published: Wednesday, December 19, 2018, 18:10 [IST]
Other articles published on Dec 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+