சென்னையில் செய்யப்பட்ட 4 சம்பவம்.. தமிழர்கள் மனதை வென்ற பாக். வீரர்.. டாப் 4 இன்னிங்ஸ் இதோ
சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானம் எப்போதும் ரன் குவிப்புக்கு சாதகமாக செயல்படும் ஆடுகளம் ஆகும். இந்த மைதானத்தில் பல சிறப்பான இன்னிங்ஸ் ஆடப்பட்டு இருக்கிறது.
சென்னை மக்கள் எப்போதுமே அறிவு சார்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் என்று கிரிக்கெட் உலகம் புகழ்வது உண்டு. இதற்கு காரணம், சென்னையில் எந்த நாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், அவர்களுக்கு எழுந்து நின்று கை தட்டி பாராட்டுவார்கள்.
இப்படி ஒரு காட்சியை நீங்கள் இந்தியாவில் வேறு எந்த மைதானத்திலும் பார்க்க முடியாது. தற்போது சென்னை மைதானத்தில் அடிக்கப்பட்ட சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் குறித்து பார்ப்போம்.

சையது அன்வர்
சென்னை சேப்பாக்கம் என்றாலே, அனைவரின் மனதில் வரும் பெயர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சையது அன்வர் தான். 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சையது அன்வர் 146 பந்துகளை எதிர்கொண்டு 194 ரன்கள் அடித்தார். இதில் 22 பவுண்டரிகளும், 5 சிக்சரும் அடங்கும். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஆட்டமிழந்துவிடுவார். அப்போது ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று பாராட்டியது.

தோனி
அடுத்ததாக சென்னையில் விளையாடப்பட்ட சிறந்த இன்னிங்ஸ் என்றால், அது தோனி விளையாடியது தான். ஆசிய லெவன் மற்றும் ஆப்பிரிக்க லெவன் அணிக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் ஆசிய லெவனுக்காக விளையாடிய தோனி, 97 பந்தில் 139 ரன்கள் விளாசினார். இதில் 15 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.

கோலி
இதே போன்று 2015ஆம் ஆண்ட தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிங் கோலி செய்த சம்பவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் கோலி 140 பந்துகளில் 138 ரன்கள் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 6 சிக்சரும் அடங்கும். கோலியின் அதிரடியால் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது.

தோனியின் பெஸ்ட்
சென்னையில் விளையாடப்பட்ட சிறந்த இன்னிங்சில் தோனி செய்த சம்பவமும் முக்கியமானது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு செய்த பாகிஸ்தான் இந்தியாவின் டாப் ஆர்டரை சரித்தது, இந்தியா 29 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடிய போது களத்துக்கு வந்த தோனி, அபாரமாக விளையாடி 113 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்தியாவின் ஸ்கோர் 227 ரன்ற கவுரவமான இலக்கை எட்டியது.


Click it and Unblock the Notifications