மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது முடிவடைந்த நிலையில் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கான விருந்து தற்போது காத்திருக்கிறது. ஆம், இந்திய அணி வரும் ஜூன் இருபதாம் தேதி முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அதற்கு முன்பு ஜூன் 11ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும்,தென்னாப்பிரிககாவும் மோதுகிறது. இந்த சூழலில் சில வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறப்பாக விளையாடினால் டி20 போட்டிகளில் சொதப்புவார்கள்.

சில டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டின் சொதப்புவார்கள். ஆனால் டெஸ்டிலும், டி20லும் அபாரமாக விளையாடிய வீரர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் ஐபிஎல் தொடர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ரகானே.
கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஹானே ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் 12 இன்னிங்ஸில் விளையாடி 390 ரன்கள் அடித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 147 ஆகும். ரஹானே ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்ளை கடந்து இருக்கிறார். இதில் இரண்டு சதம், 33 அரை சதம் அடங்கும். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் விளையாடியுள்ள ரகானே 5077 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 12 சதம், 26 அரைசதம் அடங்கும்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்கா வீரர் டிவில்லியஸ், டி20 கிரிக்கெட்டில் 360 டிகிரியில் விளையாடும் டிவில்லியர்ஸ் 516 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதம், 40 அரை சதம் அடங்கும். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் டிவில்லியர்ஸ் 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8765 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் அவருடைய சராசரி 50 ஆகும். இதில் 22 சதம் அடங்கும். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ஐபிஎல் போட்டிகளில் 184 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 6565 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 40 ஆகும்.இதில் 62 அரை சதம் அடங்கும். நான்கு சதம் அடங்கும். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8786 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 26 சதமாகும்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்தவர் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். 267 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 8661 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் எட்டு சதம்,63 அரை சதம் அடங்கும். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 123 போட்டிகள் விளையாடி 9230 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 46 ஆகும்.