Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022ஆம் ஆண்டில் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்கள்.. ரசிகர்களை கண்ணீர் சீந்த வைத்த 2022.. முழு விவரம்

மெல்போர்ன் : 2022ஆம் ஆண்டு கிரிக்கெட்டை பொறுத்தவரை சோகமான ஆண்டாகவே அமைந்தது. பல கனவுகளுடன் தொடங்கிய இந்த ஆண்டில் யாருமே எதிர்பாராத பல அதிர்ச்சி மரணங்கள் நிகழ்ந்து ரசிகர்களை கதிகலங்க வைத்தது.

இது கனவாக இருக்க கூடாதா.. இது பொய் என்று யாரும் சொல்ல மாட்டார்களா எனறு நினைக்க வைத்தது 2022ஆம் ஆண்டு.

இந்த வருடம் முடியும் போது கூட, நம் மனதுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களும், நடுவரும் இல்லை என்று சொன்னால் கண்களில் ஓரம் நம் அறியாமலேயே கண்ணீர் வந்து விடுகிறது.

ராட் மார்ஸ்

ராட் மார்ஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த ராட் மார்ஷ் தனது 74வது வயதில் உயிரிழந்தார். மார்ச் மாதம் 4ஆம் தேதி வெளிவந்த இந்த செய்தி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை சோகத்தில் ஆழ்த்தியது. காரணம், ராட் மார்ஷ், பல வீரர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் ராட் மார்ஸ் இருந்தார்.

வார்னே

வார்னே

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்க்கையில் வராமலேயே போய் இருக்கலாம். ராட் மார்ஷ் இறந்த அடுத்த சில மணி நேரத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற வீரர் சேன் வார்னே காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை உலுக்கியது. தாய்லாந்தில் இன்ப சுற்றுலா சென்ற இடத்தில் மாடல் அழகியுடன் உல்லாசமாக இருந்த வார்னேக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வார்னேவின் மரணத்தை இன்றும் நினைத்தாலும் மனது ஏற்க மறுக்கிறது.

சைமண்ட்ஸ்

சைமண்ட்ஸ்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் மே மாதம் 14ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 46 வயதான அவர் டவுன்ஸ்வெயில் என்ற நகரத்தில் வெளியே கார் ஓட்டி சென்ற போது, விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே சைமண்ட்ஸ் உயிரிழந்தார். ஒரே ஆண்டில் 3 பிரபல வீரர்களை 2022ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் பறிகொடுத்தனர்.

ரூடி குர்ட்சன்

ரூடி குர்ட்சன்

பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நடுவர் ரூடி குர்ட்சன் 2022ஆம் ஆண்ட ஆகஸ்ட் 9ஆம் தேதி காலமானார். 73 வயதான அவர், கோல்ஃப் விளையாடி விட்டு திரும்பிய போது கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதிக சர்வதேச கிரக்கெட் போட்டியில் செயல்பட்ட 2வது நடுவர் என்ற பெருமையை அவர் பெற்று இருந்தார். ரூடி குர்ட்சன் அவுட் கொடுக்கும் போது மெதுவாக கை உயர்த்துவதை இனி ரசிகர்கள் எங்கும் பார்க்க முடியாது.

ஆசாத் ரவுஃப்

ஆசாத் ரவுஃப்

பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர் ஆசாத் ரவுஃப் தனது 66 வயதில் மாரடைப்பி காரணமாக காலமானார். ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கியதை அடுத்து, நடுவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட்டிலிருந்து விலகி பாகிஸ்தானில் காலணி கடை நடத்தி வந்த நிலையில், அவர் உயிர் இழந்தார். இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் விக்கெட் கீப்பர் டேவிட் முர்ரேவும் 2022ஆம் ஆண்டு ஆண்டு தான் காலமானார்.

Story first published: Friday, December 16, 2022, 23:32 [IST]
Other articles published on Dec 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+