Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நாட்டில் பிறந்து வேறு நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் பட்டியல்

மும்பை : இந்தியாவில் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள ஒரு இளைஞரிடம் நீங்கள் சென்று கேட்டால், எனது நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆட்டத்திலாவது விளையாட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதே போல் அனைத்து நாட்டினரும் தங்கள் தேசத்திற்காக சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால் சிலருக்கு அந்த பாக்கியம் கிடைக்காது. பிறந்தது ஒரு நாடாக இருந்தாலும் வேறு ஒரு நாட்டுக்காக களமிறங்கி பல சாதனைகளை படைத்தவர்கள் இங்கு ஏராளராக இருக்கிறார்கள். அதை போல் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாட்டில் பிறந்து மற்றொரு நாட்டில் சாதித்த வீரர்கள் குறித்து தற்போது நாம் பார்க்க இருக்கின்றோம்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பீட்டர்சன். இவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்து, இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆன்றூ சைமன்ட்ஸ். சைமன்ட்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினாலும் அவர் பிறந்தது இங்கிலாந்து ஆகும்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இம்ரான் தாஹிர். பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த இம்ரான் தாஹிர் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி சாதித்தவர். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்து வளர்ந்தாலும், இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் உஸ்மான் கவாஜா. பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறார். இதேபோன்று இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜிம்பாபே வீரர் சிக்கந்தர் ராசா. பாகிஸ்தான் நாட்டில் பிறந்த ஷிக்கந்தர் ராசா ஜிம்பாப்வே அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பவர் நாசர் ஹுசைன். நாசர் உசேன் இந்தியாவில் பிறந்து இன்னும் சொல்லப்போனால் சென்னையில் பிறந்து இங்கிலாந்து அணியின் கேப்டனாக விளையாடி இருக்கிறார். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ். இவரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார்.

இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் மோசஸ் ஹென்ரிக்யூஸ். இவர் போர்ச்சுகல் நாட்டில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி இருக்கிறார். இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருப்பவர் மானஸ் லாபஸ்சேன். ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரராக விளங்கும் இவர், தென்னாபிரிக்காவில் பிறந்து இருக்கிறார்.

இந்த பட்டியலில் 11வது இடத்தை பிடித்திருப்பவர் ஆன்டி பிளவர். இவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்து ஜிம்பாப்வே அணிக்காக விளையாடுகிறார். இந்த பட்டியலில் 12வது பிடித்திருப்பவர் கிராண்டி ஹோம். இவர் ஜிம்பாப்வே நாட்டில் பிறந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார்.

Story first published: Monday, September 16, 2024, 18:44 [IST]
Other articles published on Sep 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+