Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி போட்டியில் சதம் அடித்து ஓய்வு பெற்ற வீரர்கள் பட்டியல்

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியில் எப்படி சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதே போல் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் போது பெரிய சாதனை படைத்து விட்டு செல்ல வேண்டும் என்று வீரர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அப்படி ஒரு பாக்கியம் நிறைய வீரர்களுக்கு கிடைத்தது கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனை கடைசி டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி போட்டியில் சதம் அடித்து விட்டு ஓய்வு பெற்ற வீரர்கள் குறித்து தான் தற்போது நாம் பார்க்க இருக்கின்றோம்.

india vs bangladesh ind vs ban virat kohli

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் அஸ்டெர் குக். இவர் தனது கடைசி டெஸ்டில் 147 ரன்கள் குவித்தார். இதேபோன்று இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் தென்னாப்பிரிக்க வீரர் காலிஸ். இவர் தன்னுடைய கடைசி டெஸ்டில் 115 ரன்கள் குவித்து ஓய்வு பெற்றார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் முகமது அசாருதீன்.

இவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசி டெஸ்டில் 102 ரன்கள் குவித்து ஓய்வு பெற்றார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம். இவர் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் 2016 ஆம் ஆண்டு 145 ரன்கள் குவித்து ஓய்வு பெற்றார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் கிரேக் சேப்பல். இவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 182 ரன்கள் குவித்தார்.

இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் இலங்கை அணியின் அரவிந்தன் டி சில்வா. இவர் வங்கதேசத்துக்கு எதிராக கடைசிப் போட்டியில் 206 ரன்கள் குவித்து ஓய்வு பெற்றார். இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து அணியில் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன். இவர் 2004 ஆம் ஆண்டு தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசி ஓய்வு பெற்றார்.

india vs bangladesh ind vs ban virat kohli

இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லஸ்பி. இவர் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்து விட்டு ஓய்வு பெற்றார். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் பில் ஜாக்கஸ். இவர் 2008 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து விட்டு ஓய்வு பெற்றார்.

இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பில்ஸ் பாண்ட்ஸ்போர்ட். இவர் 1934 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 266 ரன்கள் குவித்து ஓய்வு பெற்றார். இந்த பட்டியலில் 11வது இடத்தை பிடித்திருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சேமோர் நர்ஸ். இவர் 1969 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 258 ரன்கள் குவித்து ஓய்வு பெற்றார். இந்த பட்டியலில் 12வது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீர ரெஜினால்ட் டப். இவர் 1905 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 146 ரன்கள் குவித்து பின் ஓய்வு பெற்றார்.

Story first published: Tuesday, September 17, 2024, 10:00 [IST]
Other articles published on Sep 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+