Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியல்.. கில்லுக்கு எந்த இடம்?

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமையை அவர் படைத்திருக்கின்றார்.

இந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதல் இடத்தில் அதிரடி வீரர் சேவாக் இருக்கிறார். இவர் சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 319 ரன்கள் குவித்தது தான் இதுவரை சாதனையாக இருக்கின்றது.

Ind vs Eng

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்திலும் சேவாக் தான் இருக்கின்றார். பாகிஸ்தானில் முல்தான் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் சேவாக் 309 அடித்திருக்கின்றார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் கருண் நாயர் இருக்கின்றார். இவர் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக 303 ரன்கள் அடித்து இருந்தார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் மீண்டும் சேவாக் தான் இடம் பிடித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக ஷேவாக் 293 ரன்கள் அடித்திருந்தார். ஒருவேளை சேவாக் இந்த போட்டியில் முச்சதம் அடித்திருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று முறை முச்சதம் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்று இருப்பார்.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் லக்ஷ்மன் இருக்கின்றார். இவர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் குவித்து இருந்தார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் ராகுல் டிராவிட் இருக்கின்றார்.

இவர் பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பண்டி டெஸ்ட் போட்டியில் 270 ரன்கள் குவித்து இருந்தார்.
இந்த பட்டியலில் ஏழாம் இடத்தில் தற்போது கில் இடம் பெற்றுள்ளார். கில் இங்கிலாந்துக்கு எதிராக 269 ரன்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் கில் அடித்தது மட்டும்தான் சேனா நாடுகளில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 3, 2025, 23:57 [IST]
Other articles published on Jul 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+