Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் பட்டியல்

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் பல ஸ்டார் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் பலரும் தனது தண்டனையை அனுபவித்து நிரபராதி என பெயர் வாங்கி இருக்கிறார்கள். இந்த சூழலில் ஐசிசி எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக தற்போது கிரிக்கெட்டில் சூதாட்டம் ஒழிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் இதற்கு முன்பு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட வீரர்களை தற்போது பார்க்கலாம். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

india vs pakistan match fixing


இதனால் அசாருதீன் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நீதிமன்றத்தில் வாதாடி தான் குற்றம் அற்றவன் என்பதை ஆசாருதீன் நிரூபித்ததை அடுத்து அவர் மீதான தடை நீக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அசாரூதீன்க்கு வயதாகிவிட்டது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஸ்ரீசாந்த்.

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்சரில் ஈடுபட்டதாக கூறி அவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இன்னும் நீதிமன்றத்தில் வாதாடி அவர் மீது உரிய சாட்சிகள் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவரை அந்த வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால் அதற்குள் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியனின் நட்சத்திர வீரர் அஜய் ஜடேஜா இருந்தார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் மனோஜ் பிரபாகர். இவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தடை விதிக்கப்பட்டது.

இதேபோன்று பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் சூதாட்டில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து அவர் இன்று வரை போராடி வருகிறார். இதேபோன்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் தனிஷ் கனேரியாவும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய ஒரே இந்து மதத்தைச் சார்ந்த கிரிக்கெட் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் தம் இது வீண் பழி சுமத்தப்பட்டதாக தானீஷ் கனேரியா வாதாடினார். இதேபோன்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சல்மான் பட் கேப்டனாக இருந்தபோது ஸ்பார்ட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதே போன்று இந்த குற்றத்தில் ஈடுபட்ட முகமது அமீருக்கும் ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. மற்றொரு பாகிஸ்தான் அணியின் ஸ்டார் வீரரான உமர் அக்மல் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை பெற்றார்.

Story first published: Monday, January 27, 2025, 22:47 [IST]
Other articles published on Jan 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+