Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசைவம் வேண்டாம்.. திடீரென்று பாதியில் சைவத்திற்கு மாறிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்.. ஒருவரை தவிர!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது தங்களது உடல் தகுதியை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக உணவு விஷயத்தில் பல முன்னணி வீரர்களும் பல தியாகங்களை செய்து உடல் தகுதியை பாதுகாக்கிறார்கள்.

உடல் தகுதியில் கவனம் செலுத்தினால் மட்டுமே சர்வதேச அளவில் மற்ற அணிகளுக்கு நாம் போட்டியாக இருக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட்டின் வடிவத்தையே விராட் கோலி மாற்றினார்.

List of indian cricketers who became vegetarian and follows strict diet plan

இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் பலர் நெட்பிளிக்சில் ஒளிபரப்பான கேம் சேஞ்சர் என்ற ஒரு டாக்குமெண்டரியை பார்த்து அசைவ சாப்பாட்டில் இருந்து சைவத்திற்கு மாறி இருக்கிறார்கள். ஆனால் அந்த டாக்குமெண்டரியில் பல சர்ச்சைகள் இருக்கிறது. எனினும் இந்திய அணி வீரர்கள் சைவம் சாப்பிட்டால் தான் உடல் தகுதியை நிலைநாட்ட முடியும் என்று நம்புகின்றனர்.

இதனால் பாதியிலே அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய கிரிக்கெட் வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் விராட் கோலி. பெயரிலே கோலி இருக்கும் போது கோழி சாப்பிடாமல் இருந்திருப்பாரா.அசைவம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆட்டுக்கால் இறைச்சியை சாப்பிடுவாராம். இந்த நிலையில் பட்டர் சிக்கனையும் விராட் கோலி சாப்பிடுவார்.இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் முழு சைவமாக மாறி இருக்கிறார்.

இதேபோன்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆரம்ப காலத்தில் அசைவ உணவை கொஞ்சம் எடுத்துக் கொண்டாலும் தற்போது முழு சைவமாக தான் இருக்கிறார். இதேபோன்று இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அசைவ உணவை சாப்பிட்டு தான் வளர்ந்திருக்கிறார். ஆனால் இந்து மத குருக்கள் வழிகாட்டுதலின் பெயரில் தற்போது முழுமையாக சைவத்திற்கு மாறி இருக்கிறார்.

இதேபோன்று ஹர்திக் பாண்டியாவும் அசைவ உணவை சாப்பிட்டு தான் வளர்ந்து இருக்கிறார். ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்காக முழு சைவமாக கடந்த சில ஆண்டுகள் மாறியிருக்கிறார். இதேபோன்று இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் சாஹலும் அசைவ பிரியராக இருந்திருக்கிறார். ஆனால் 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு முழு சைவமாக மாறிவிட்டதாக அவரும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அசைவத்தில் இருந்து சைவம் சாப்பிட்டதால் தான் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் காயம் ஏற்படுவதாகவும் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், நம் உடலை எப்படி பாதுகாக்கிறோம் என்பதில் தான் ஒரு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு இருக்கிறது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக நம்ம தல தோனி ஆரம்பகாலத்தில் இருந்து இப்போது வரை அசைவ உணவை தான் விரும்பி சாப்பிடுகிறார். தோனிக்கு சிக்கன் வகைகள் என்றால் அவ்வளவு பிடிக்குமா? இதிலிருந்து எந்த உணவு எடுத்துக் கொள்கிறோம் என்பதில் இல்லை,எவ்வளவு எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் சூட்சுகமே இருக்கிறது.

Story first published: Thursday, February 8, 2024, 21:55 [IST]
Other articles published on Feb 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+