Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்.. கவனத்தை பெறும் 4 இந்திய வீரர்கள்.. எதிர்காலமே இவங்க தான்

மும்பை : இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் மூன்றாம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் மும்பையில் இன்று முகாமிட்டு பயிற்சி செய்து வருகின்றனர்.

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதை அடுத்து சீனியர் வீரர்களுக்கு டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனால் முற்றிலும் இளம் வீரர்களை வைத்து ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. வரும் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் நடைபெறுகிறது.

இதில் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொடரில் கவனத்தை ஏற்படுத்தக்கூடிய நான்கு வீரர்கள் குறித்து தற்போது காணலாம்.

சிவம் மவி

சிவம் மவி

அண்டர் 19 கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சிவம் மவி, பிறகு காயம் காரணமாக பல்வேறு தொடர்களில் விளையாடாமல் இருந்தார். எனினும் தற்போது முழு உடல் தகுதியை எட்டிய சிவம் மவி சையது முஸ்தாக் அலி தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஐபிஎல் மினி ஏலத்தில் குஜராத் தனி அவரை ஆறு கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் இல்லாத நிலையில் சிவம் மவிக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

 சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

இந்திய கிரிக்கெட் அணியில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட வீரர்களின் ஒருவரான சஞ்சு சாம்சனுக்கு இலங்கைக்கு எதிரான டி20 தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நடப்பு ரஞ்சித் தொடரில் 284 ரன்கள் அடித்துள்ள சஞ்சு சாம்சன் 14 சிக்ஸர்களை விளாசி உள்ளார். சஞ்சு சாம்சன் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கைத் தொடரில் சஞ்சு சாம்சன் கவனிக்கத்தக்க வீரராக திகழ்வார்.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

இதேபோன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசி மீண்டும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு திரும்புகிறார். தொடக்க வீரராக இஷான் கிஷன் களமிறங்குவதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டு டி20 அணியில் தனது இடத்தை உறுதி செய்து கொள்வார் என ரசிகர்கள் நம்புகின்றனர். இதனால் இலங்கைத் தொடரில் கவனிக்கத்தக்க வீரராக அவர் இருப்பார். இந்திய டி20 அணியின் குறையாக தொடக்க ஜோடி தான் உள்ள நிலையில் இஷான் கிஷன் அதனை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார். இலங்கைக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா நிச்சயம் பேட்டிங், பந்துவீச்சு கேப்டன் என மூன்று பிரிவுகளிலும் ஜொலிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா எப்படி கேப்டனாக செயல்படுகிறார் என்பதை பொறுத்து அவருடைய எதிர்காலம் இருக்கும்.

Story first published: Sunday, January 1, 2023, 13:35 [IST]
Other articles published on Jan 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+