
தினேஷ் கார்த்திக்
37 வயதான தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி டி20 கிரிக்கெட்டில் விளையாடினார். எனினும் முக்கிய கட்டமான டி20 உலக கோப்பையில் அவர் சரியாக செயல்படவில்லை. இதனால் தினேஷ் கார்த்திக் அரையிறுதி போட்டியில் நீக்கப்பட்டார். தற்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் இனி இந்திய அணியில் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ளது.

இஷாந்த் சர்மா
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக விளங்கிய இஷாந்த் சர்மா கடைசியாக இந்திய அணிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விளையாடினார். அதன் பிறகு 13 மாதங்களாக இந்திய அணியிலிருந்து இஷாந்த் சர்மா நீக்கப்பட்டார். டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் இஷாந்த் சர்மா தற்போது விளையாடி வரும் நிலையில் இந்திய அணி நடப்பாண்டில் வெறும் எட்டு போட்டிகளில் மட்டுமே டெஸ்டில் களம் இறங்குகிறது .இதனால் இஷாந்த் ஷர்மாவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக உள்ளது.

ஜெயந்த் யாதவ்
32 வயதான இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவ் இந்திய அணிக்காக கடைசியாக மார்ச் 2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் சபாஷ் அகமது போன்ற வீரர்கள் வரிசையாக காத்திருப்பதால் இனி ஜெயந்த் யாதவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்.

ஷிகர் தவான்
இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் ஏற்கனவே டெஸ்ட், டி20 அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இந்திய அணியில் இசான் கிஷன் போன்ற இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இனி ஷிகர் தவான் அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் 2023 ஆம் ஆண்டில் அவர் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

சாஹா
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பராக விளங்குபவர் 38 வயதான விருத்திமான் சாஹா. இந்திய அணிக்காக கடைசியாக டிசம்பர் 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இனி இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்போம். இதனால் நீங்கள் ஓய்வு அறிவித்து விடுங்கள் என சாஹாவிடம் பிசிசிஐ நிர்வாகிகள் நேரில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலிருந்து இன்று வரை சாஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications