For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய டெஸ்ட் அணியின் 37 டெஸ்ட் கேப்டன்கள் யார், யார்? பெயர், கேப்டன்சி ரெக்கார்டு முழு விவரம்

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு கில் கேப்டனாக செயல்பட உள்ளார். இவர் இந்தியாவின் 37-வது டெஸ்ட் கேப்டன் ஆவார். இந்த நிலையில், இந்திய அணியின் 37 டெஸ்ட் கேப்டன்கள் யார், அவர்கள் எத்தனை ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டனர், எத்தனை போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தனர், அதில் எத்தனை வெற்றி, தோல்வி மற்றும் டிரா என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது 37-வது கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதே அணியில் இந்திய டெஸ்ட் அணியின் வேறு இரண்டு கேப்டன்களும் உள்ளனர். கே.எல். ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா மூன்று போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையும் சேர்த்து சுப்மன் கில் இந்திய அணியின் 37-வது டெஸ்ட் கேப்டன் ஆவார். முழு பட்டியலை இங்கே பார்க்கலாம்.

List of India s Test Captains - Shubman Gill is 37th test captain

இந்திய டெஸ்ட் அணி கேப்டன்கள் பட்டியல் -

  1. சி.கே. நாயுடு - 1932 முதல் 1934 வரை - 4 போட்டிகள் - 0 வெற்றி - 3 தோல்வி - 1 டிரா

  2. மகாராஜ்குமார் (விஜயநகரம்) - 1936 முதல் 1936 வரை - 3 போட்டிகள் - 0 வெற்றி - 2 தோல்வி - 1 டிரா

  3. இஃப்திகார் அலி கான் பட்டோடி - 1946 முதல் 1946 வரை - 3 போட்டிகள் - 0 வெற்றி - 1 தோல்வி - 2 டிரா

  4. லாலா அமர்நாத் - 1947 முதல் 1952 வரை - 15 போட்டிகள் - 2 வெற்றி - 6 தோல்வி - 7 டிரா

  5. விஜய் ஹசாரே - 1951 முதல் 1953 வரை - 14 போட்டிகள் - 1 வெற்றி - 5 தோல்வி - 8 டிரா

  6. வினு மன்கட் - 1955 முதல் 1959 வரை - 6 போட்டிகள் - 0 வெற்றி - 1 தோல்வி - 5 டிரா

  7. குலாம் அகமது - 1955 முதல் 1959 வரை - 3 போட்டிகள் - 0 வெற்றி - 2 தோல்வி - 1 டிரா

  8. பாலி உம்ரிகர் - 1955 முதல் 1958 வரை - 8 போட்டிகள் - 2 வெற்றி - 2 தோல்வி - 4 டிரா

  9. ஹேமு அதிகாரி - 1959 முதல் 1959 வரை - 1 போட்டி - 0 வெற்றி - 0 தோல்வி - 1 டிரா

  10. தத்தா கெய்க்வாட் - 1959 முதல் 1959 வரை - 4 போட்டிகள் - 0 வெற்றி - 4 தோல்வி - 0 டிரா

  11. பங்கஜ் ராய் - 1959 முதல் 1959 வரை - 1 போட்டி - 0 வெற்றி - 1 தோல்வி - 0 டிரா

  12. குலாப்ராய் ராம்சந்த் - 1959 முதல் 1960 வரை - 5 போட்டிகள் - 1 வெற்றி - 2 தோல்வி - 2 டிரா

  13. நாரி கான்ட்ராக்டர் - 1960 முதல் 1962 வரை - 12 போட்டிகள் - 2 வெற்றி - 2 தோல்வி - 8 டிரா

  14. மன்சூர் அலி கான் பட்டோடி - 1962 முதல் 1975 வரை - 40 போட்டிகள் - 9 வெற்றி - 19 தோல்வி - 12 டிரா

  15. சந்து போர்டே - 1967 முதல் 1967 வரை - 1 போட்டி - 0 வெற்றி - 1 தோல்வி - 0 டிரா

  16. அஜித் வடேகர் - 1971 முதல் 1974 வரை - 16 போட்டிகள் - 4 வெற்றி - 4 தோல்வி - 8 டிரா

  17. ஸ்ரீநிவாசராகவன் வெங்கடராகவன் - 1974 முதல் 1979 வரை - 5 போட்டிகள் - 0 வெற்றி - 2 தோல்வி - 3 டிரா

  18. சுனில் கவாஸ்கர் - 1976 முதல் 1985 வரை - 47 போட்டிகள் - 9 வெற்றி - 8 தோல்வி - 30 டிரா

  19. பிஷன் சிங் பேடி - 1976 முதல் 1978 வரை - 22 போட்டிகள் - 6 வெற்றி - 11 தோல்வி - 5 டிரா

  20. குண்டப்பா விஸ்வநாத் - 1980 முதல் 1980 வரை - 2 போட்டிகள் - 0 வெற்றி - 1 தோல்வி - 1 டிரா

  21. கபில் தேவ் - 1983 முதல் 1987 வரை - 34 போட்டிகள் - 4 வெற்றி - 7 தோல்வி - 23 டிரா

  22. திலீப் வெங்சர்க்கர் - 1987 முதல் 1989 வரை - 10 போட்டிகள் - 2 வெற்றி - 5 தோல்வி - 3 டிரா

  23. ரவி சாஸ்திரி - 1988 முதல் 1988 வரை - 1 போட்டி - 1 வெற்றி - 0 தோல்வி - 0 டிரா

  24. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் - 1989 முதல் 1989 வரை - 4 போட்டிகள் - 0 வெற்றி - 0 தோல்வி - 4 டிரா

  25. முகமது அசாருதீன் - 1990 முதல் 1999 வரை - 47 போட்டிகள் - 14 வெற்றி - 14 தோல்வி - 19 டிரா

  26. சச்சின் டெண்டுல்கர் - 1996 முதல் 2000 வரை - 25 போட்டிகள் - 4 வெற்றி - 9 தோல்வி - 12 டிரா

  27. சௌரவ் கங்குலி - 2000 முதல் 2005 வரை - 49 போட்டிகள் - 21 வெற்றி - 13 தோல்வி - 15 டிரா

  28. ராகுல் டிராவிட் - 2003 முதல் 2007 வரை - 25 போட்டிகள் - 8 வெற்றி - 6 தோல்வி - 11 டிரா

  29. வீரேந்திர சேவாக் - 2005 முதல் 2012 வரை - 4 போட்டிகள் - 2 வெற்றி - 1 தோல்வி - 1 டிரா

  30. அனில் கும்ப்ளே - 2007 முதல் 2008 வரை - 14 போட்டிகள் - 3 வெற்றி - 5 தோல்வி - 6 டிரா

  31. எம்.எஸ். தோனி - 2008 முதல் 2014 வரை - 60 போட்டிகள் - 27 வெற்றி - 18 தோல்வி - 15 டிரா

  32. விராட் கோலி - 2014 முதல் 2022 வரை - 68 போட்டிகள் - 40 வெற்றி - 17 தோல்வி - 11 டிரா

  33. அஜிங்க்யா ரஹானே - 2017 முதல் 2021 வரை - 6 போட்டிகள் - 4 வெற்றி - 0 தோல்வி - 2 டிரா

  34. கே.எல். ராகுல் - 2022 முதல் 2022 வரை - 3 போட்டிகள் - 2 வெற்றி - 1 தோல்வி - 0 டிரா

  35. ரோகித் சர்மா - 2022 முதல் 2024 வரை - 24 போட்டிகள் - 12 வெற்றி - 9 தோல்வி - 3 டிரா

  36. ஜஸ்பிரித் பும்ரா - 2022 முதல் 2025 வரை - 3 போட்டிகள் - 1 வெற்றி - 2 தோல்வி - 0 டிரா

  37. சுப்மன் கில் - 2025 - புதிய கேப்டன்

Story first published: Saturday, May 24, 2025, 15:23 [IST]
Other articles published on May 24, 2025
English summary
List of India's Test Captains - Shubman Gill is 37th test captain. This list contains The captain’s names, tenure and captaincy record.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+