Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.யை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா.. இது எத்தனையாவது முறை தெரியுமா? முழு விவரம்

நாக்பூர் : டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவுவது என்பது மிகவும் மோசமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதாவது எதிரணி ஒரு இன்னிங்ஸில் அடித்த இலக்கை நம்மால் இரண்டு முறை பேட்டிங் செய்தும் அடிக்க முடியவில்லை என்பது தான் அதன் பொருள்.

இப்படிப்பட்ட தோல்வியை தான் இன்று ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இந்த தோல்வியால் இந்திய அணியின் உத்வேகம் அதிகரித்தாலும்,ஆஸ்திரேலியாவை எளிதாக எண்ணிவிடக்கூடாது.

அஸ்வின் எச்சரிக்கை

அஸ்வின் எச்சரிக்கை

இதனை தான் அஸ்வின் கூட இன்று வெற்றி பெற்ற பிறகு கூறினார். ஆஸ்திரேலியா உலகத்தரம் வாய்ந்த அணி என்றும் அவர்களை சாதாரணமாக எண்ணி விடாமல் அடுத்த போட்டிக்கு தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா வீரர்கள் பிளான் பி ஐ பயன்படுத்தி நம்மை தோற்கடிக்க வீரியமாக விளையாடுவார்கள் என்றும் சக அணி வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியதே இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

கனவிலும் நடக்காது

கனவிலும் நடக்காது

அதே சமயம் இந்தியாவிடம் இப்படி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்பது இது முதல் முறை அல்ல. ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணி இன்னிங்ஸ் வித்யாசத்தில் தோல்வியை தழுவுவது என்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத விஷயம். ஏனென்றால் ஒரு காலத்தில் தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா இரண்டு முறை படைத்து இருக்கிறது. அந்த இரண்டு முறையும் இந்தியா தான் ஆஸ்திரேலியாவின் வெற்றியை தடுத்தது என்பது கொசுறு தகவல்.

இன்னிங்ஸ் தோல்வி

இன்னிங்ஸ் தோல்வி

அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவை இந்தியா இதுவரை ஐந்து முறை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது.முதல் முறையாக 1978 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக இன்னிங்ஸ் மற்றும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு 1979 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா பந்தாடியது. அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

10 ஆண்டுகளுக்கு பிறகு

10 ஆண்டுகளுக்கு பிறகு

இதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாக்பூரில் ஆஸ்திரேலியாவை இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் பட்டியலில் மேலும் சில டெஸ்ட் போட்டிகள் இந்த தொடரிலே சேர வேண்டும் என்பதுதான் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Story first published: Saturday, February 11, 2023, 22:46 [IST]
Other articles published on Feb 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+