மும்பை அணியில் ரஷித் கான், சாம்கரன்..தென்னாப்பிரிக்காவில் வேலையை காட்டும் ஐபிஎல் அணிகள்..முழு விவரம்

டர்பன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள புதிய டி20 லீக் தொடரில் பங்குபெறும் 6 அணிகளையும் , இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் அணிகளே வாங்கியது.

இதில் சென்னை அணி ஜோகனஸ்பர்க் அணியையும், மும்பை அணி கேப் டவுன் அணியையும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பார்ல் அணியை ராஜஸ்தானும் வாங்கியுள்ளன.

தற்போது வரை 30 வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

மூன்றரை கோடி ரூபாய்

மூன்றரை கோடி ரூபாய்

இதில் அதிகபட்சமாக இங்கிலாந்தை சேர்ந்த 11 வீரர்களும், இலங்கையை சேர்ந்த 10 வீரர்களும் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் விளையாட தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதில், இந்திய ரூபாய் மதிப்பில் மூன்றரை கோடி ரூபாய் ஊதியத்திற்கு பட்லர் மற்றும் லிவிங்ஸ்டோன் தங்களது பெயரை கொடுத்துள்ளனர்.

5 வீரர்கள் ஓப்பந்தம்

5 வீரர்கள் ஓப்பந்தம்

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 17 வீரர்கள் விளையாடலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள், ஒரு தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் சர்வதேச போட்டி அனுபவம் இல்லாத ஒரு தென்னாப்பிரிக்க வீரர் என 5 பேரை ஏலத்துக்கு முன்பே ஒப்பந்தம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 வெளிநாட்டு விரர்களும் வேவ்வெறு நாட்டை சேர்ந்த வீரர்களாக இருக்க வேண்டும்.

எந்த அணி வாங்கியது

எந்த அணி வாங்கியது

அதன் படி, மும்பை அணி ரஷித் கான், லிவிங்ஸ்டோன், ரபாடா, சாம் கரண் என 4 வீரர்களை முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுபிளஸிஸ் மற்றும் மொயின் அலியை ஒப்பந்தம் செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் ஆண்டிரிச் நோக்கியாவையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜாஸ் பட்லரையும் ஒப்பந்தம் செய்துள்ளது.

Recommended Video

India அணியின் Captain-ஆக KL Rahul பெயர் அறிவிப்பு | IND vs ZIM *Cricket
ஏலம் எப்போது

ஏலம் எப்போது

இதே போன்று எஸ்.ஆர்.ஹச் அணி ஏய்டன் மார்க்கரத்தையும், லக்னோ அணி நிர்வாகம் குயின்டன் டி காக்கையும் ஓப்பந்தம் செய்ய உள்ளது. 6 அணிகளும் மற்ற வீரர்களை தேர்வு செய்வதற்கான எலம் அடுத்த சில வாரங்களில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடருக்கு பிறகு அதிக ஊதியம் கிடைக்கும் தொடராக தென்னாப்பிரிக்க டி20 தொடர் விளங்குகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
List of Marquee players signing in South Africa T20 league மும்பை அணியில் ரஷித் கான், சாம்கரன்..தென்னாப்பிரிக்காவில் வேலையை காட்டும் ஐபிஎல் அணிகள்..முழு விவரம்
Story first published: Thursday, August 11, 2022, 13:08 [IST]
Other articles published on Aug 11, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X