Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200 ரன்கள் எடுத்த அணி எது தெரியுமா?

துபாய்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தற்போது 200 ரன்கள் அடித்தால் கூட அதனை துரத்தும் அணி மிக எளிதில் எட்டி வெற்றியை பெற்று விடுகிறது. பலமான அணி, பலவீனமான அணி என்ற வேறுபாடு இல்லாமல் இது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தான்.

வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற அணிகளுடன் தோல்வியை தழுவிய இலங்கை அணி திடீரென்று இந்தியாவிற்கு எதிராக சூப்பர் ஃபோர் சுற்று போட்டியில் 202 ரன்கள் எடுத்து சமன் செய்தது. இதனை அடுத்து சூப்பர் ஓவரில் தான் இந்தியா வெற்றி பெற முடிந்தது.

T20 International cricket

இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் 200 ரன்கள் எடுத்தால் தான் நல்லது என்ற ஒரு மைன்ட் செட் பலருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக பல அணிகளும் அதிரடி வீரர்களை உருவாக்கி அணியில் தேர்வு செய்கின்றது. விராட் கோலி, கே எல் ராகுல் போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கே ஸ்ட்ரைக் ரேட் தொடர்பான விமர்சனங்களை சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் அதிக முறை 200 ரன்கள் அடித்த அணி எது என்று தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியா இருக்கின்றது. இந்திய அணி 42 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்திருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி வெறும் 25 முறை தான் 200 ரன்னுக்கு மேல் அடித்துள்ளது.

இதன் மூலம் முதலிடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தால் இந்தியா எந்த அளவிற்கு டி20 கிரிக்கெட்டில் வளர்ந்து வருகிறது என்பது தெரியவரும். இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தான். ஐபிஎல் இல் தொடர்ந்து விளையாடியதன் மூலம் இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டை எளிதாக எதிர்கொள்கின்றனர்.

அதேபோன்று தென்னாப்பிரிக்கா அணி 25 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணி 24 முறையும் நான்காவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 23 முறையும் 200 ரன்களுக்கு மேல் அடித்து உள்ளது.

Story first published: Saturday, September 27, 2025, 19:41 [IST]
Other articles published on Sep 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+