For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 கிரிக்கெட் - 2022ஆம் ஆண்டின் சிறந்த வீரர்.. 4 பேர் இடையே போட்டி.. என்ன சாதனை படைத்தார்கள்?

மும்பை : 2022 ஆம் ஆண்டிற்கான டி20 கிரிக்கெட் போட்டியில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற விருது ஐசிசியால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 4 போட்டியாளர்களை ஐசிசி தேர்வு செய்துள்ளது.

அதில் யார் இடம்பெற்று இருக்கிறார்கள்? இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பெறும் அளவு அவர்கள் இந்த ஆண்டு என்ன சாதனை படைத்திருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் இந்தியாவைச் சேர்ந்த சூரியகுமார் யாதவ். 31 டி20 போட்டிகளில் விளையாடி 1164 ரன்கள் அடித்திருக்கிறார்.

 சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் சூரியக்குமாரியாதவுக்கு கிடைத்திருக்கிறது. இதில் இரண்டு சதங்களும் ஒன்பது அரை சதங்களும் அடங்கும். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் ஆறு இன்னிங்ஸில் சூரிய குமார் யாதவ் 3 அரை சதம் அடித்தார். இதன் மூலம் டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாவும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

சிக்கந்தர் ராசா

சிக்கந்தர் ராசா

இதனை தொடர்ந்து ஜிம்பாபே வீரர் சிக்கந்தர் ராசா இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானை வீழ்த்தியதற்கு சிக்கந்தர் ராசா முக்கியமான நபராக இருந்தார். 2022 ஆம் ஆண்டில் சிக்கந்தர் ராசா 735 ரன்கள் அடித்துள்ளார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 150 ஐ தாண்டும். இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் 25 விக்கெட் களை சிக்கந்தர் ராசா நடை நடப்பாண்டில் வீழ்த்தி இருக்கிறார்.

சாம் கரன்

சாம் கரன்

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து சேர்ந்த சாம் கரன். 19 டி20 போட்டிகளில் விளையாடி 67 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள ஷாம் கரண் பந்துவீச்சில் 25 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். டி20 உலக கோப்பை போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 கிரிக்கெட் இந்த சாதனையை படைத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.

 முகமது ரிஸ்வான்

முகமது ரிஸ்வான்

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் சாம்கரன் 4 ஓவர்களில் வீசி வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான். டி20 தரவரிசை பட்டியலில் நம்பர் இரண்டாவது இடத்தில் ரிஸ்வான் இருக்கிறார். 25 போட்டிகளில் விளையாடி 996 ரன்கள் குவித்துள்ள ரிஸ்வான்,9 கேட்ச்கள், மூன்று ஸ்டெம்ப்யிட்களை விக்கெட் கீப்பராக செய்திருக்கிறார். இந்த ஆண்டில் 10 அரை சதம் அடித்துள்ள முகமது ரிஸ்வான் டி20 உலக கோப்பையில் 175 ரன்கள் அடித்தார்.

Story first published: Thursday, December 29, 2022, 23:43 [IST]
Other articles published on Dec 29, 2022
English summary
List of nominees for ICC T20 cricketers of the year award டி20 கிரிக்கெட் - 2022ஆம் ஆண்டின் சிறந்த வீரர்.. 4 பேர் இடையே போட்டி.. என்ன சாதனை படைத்தார்கள்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+