Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100வது டெஸ்டில் சதம் விளாசிய வீரர்கள்.. 10 முறை தவறவிட்ட இந்தியர்கள்.. கோலிக்கு சரியான வாய்ப்பு

மொஹாலி: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. இது சர்வதேச டெஸ்ட் அரங்கில் விராட் கோலி விளையாடும் 100வது போட்டியாகும்.

இந்தப் போட்டிக்கு ரசிகர்களின் கோரிக்கை அடுத்து, 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில், 100வது டெஸ்ட் விளையாடும் 11வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி அடைய உள்ளார்.

100வது டெஸ்ட் கிளப்

100வது டெஸ்ட் கிளப்

100 டெஸ்ட் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற கவாஸ்கர், 200வது டெஸ்ட் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையை படைத்த சச்சின், கபில் தேவ், டிராவிட், கங்குலி, லட்சுமணன்,சேவாக், அனில் கும்ப்ளே, இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங், திலீப் வெங்சர்கார் ஆகிய இந்திய வீரர்கள் இந்த பெருமையை ஏற்கனவே பெற்றுள்ளனர்.

சோகம்

சோகம்

ஆனால் எந்த இந்திய வீரர்களும் 100வது டெஸ்டில் சதம் விளாசவில்லை என்ற சோகம் இந்தியாவுக்கு உள்ளது. அதனை மாற்றும் அருமையான வாய்ப்பு விராட் கோலிக்கு உள்ளது. ஏனேனில் பலம் குன்றிய இலங்கை அணியுடன் தான் கோலி விளையாடுகிறார். கொஞ்சம் சிரமப்பட்டால், அவருக்கு தனது 71 வது சதம் வந்து சேர்ந்துவிடும்.

100வது டெஸ்டில் சதம்

100வது டெஸ்டில் சதம்

சர்வதேச அளவில் இதுவரை 9 வீரர்கள் 100வது டெஸ்டில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து வீரர் கோலின் கோவ்டிரி தான் இந்த சாதனையை முதலில் நிகழ்த்தியவர். பிறகு பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்டட், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்டன் கிரினிட்ஜ், இங்கிலாந்து வீரர் ஸ்டிவர்ட், பாகிஸ்தான் வீரர் இன்சமாம், தென்னாப்பிரிக்க வீரர் கிரேக் ஸ்மித், ஹசிம் அம்லா, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Recommended Video

IND vs SL Rohit Sharma Will Change The Total Batting Order Of Team India : Reports | Oneindia Tamil
பாண்டிங் சாதனை

பாண்டிங் சாதனை

இதில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 100வது டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலியும் சதம் விளாசி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதனால், சாதனை டெஸ்டில் சாதனை நாயகன், தனது வழக்கமான ரூட்டுக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Wednesday, March 2, 2022, 16:30 [IST]
Other articles published on Mar 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+