Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி ரஹானே, புஜாரா கிடையாது.. டெஸ்ட் அணிக்கு கடும் போட்டி .. அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு

மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் பெரிய மாற்றம் நிகழ உள்ளதாக பிசிசிஐ கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 9 ஆண்டுகளாக நடுவரிசையில் பெரிய மாற்றம் இல்லை. இந்த நிலையில் ரஹானே, புஜாரா ஆகியோர் இலங்கை தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ரோகித் சர்மாவும், ராகுல் டிராவிட்டும் இணைந்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற வேண்டும் என்றால் எஞ்சிய 11 போட்டியில் 9 போட்டியிலாவது இந்தியா வெல்ல வேண்டும். 2 போட்டிகளுக்கு மேல் டிரா செய்தாலே இறுதி போட்டிக்கு செல்ல முடியாது. இதனால் யார் ஃபார்மில் இருக்கிறார்களோ, யார் ரஞ்சி போட்டியில் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் இடம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஷர்ஃபிராஸ் கான்

ஷர்ஃபிராஸ் கான்

ராகுல் டிராவிட் விருப்ப பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ஷர்ஃபிராஸ் கான் தான். ஷர்ஃபிராஸ் கான் நடப்பு ரஞ்சி சீசனில் 3 போட்டியில் விளையாடி 551 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 275 ரன்கள் விளாசி அசத்தினார். இதனால் விரைவில் ஷர்பிராஸ் கான் இந்திய அணியில் இடம்பெறலாம்.

யாஷ் துல்

யாஷ் துல்

இதற்கு அடுத்த படியாக அனைவரின் கண்களும் இந்திய அண்டர் 19 கேப்டன் யாஷ் துல் மீது தான் உள்ளது. விராட் கோலி போல் விளையாடும் யாஷ் துல் ரஞ்சி கோப்பையில் அசத்தி வருகிறார். 3 போட்டியில் விளையாடிய அவர் 479 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். இதனால் யாஷ் துல்லை விரைவில் இந்திய அணியில் எதிர்பார்க்கலாம்.

Recommended Video

Sachin முதல் Jadeja வரை! Test Cricket-டில் நடந்த Innings Declaration | OneIndia Tamil
இளம் நட்சத்திரங்கள்

இளம் நட்சத்திரங்கள்

இதே போன்று சூரியகுமார் யாதவ், தமிழக வீரர் பாபா இந்தரஜித், வாசிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.தற்போது விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதில் யாராவது சொதப்பினால் உடனடியாக மேலே சொன்ன வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க டிராவிட், ரோகித் தயாராக உள்ளனர். இதனால் இனி புஜாரா,ரஹானேவை இந்திய அணியில் பார்ப்பது கடினம் தான் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Tuesday, March 8, 2022, 23:46 [IST]
Other articles published on Mar 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+