Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடரிலிருந்து ருத்துராஜ் விலகல்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. ஸ்கெட்ச் போட்ட தோனி !

பெங்களூரு: சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் காயம் குறித்து இந்திய அணி மருத்தவர்கள் ஆய்வு நடத்தி, அவரை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் உடல் தகுதியை மீட்கும் முயற்சிக்காக ருத்துராஜ் கெய்க்வாட் பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமிக்கு புறப்பட்டு வந்துள்ளார்.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

இந்த நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட்க்கு வலி மீண்டும் இருந்தால், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம். இதனால் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், ருத்துராஜ இல்லை என்றால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக 3 பேரை தயார் செயயலாம் என்று தோனி கணக்கு போட்டுள்ளார்.

உத்தப்பா

உத்தப்பா

நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே தொடக்க வீரராக களமிறங்க, அவருக்கு ஜோடியாக ராபின் உத்தப்பாவை தோனி களமிறக்க வாய்ப்புள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் ராபின் உத்தப்பா நல்ல பார்மில் இருந்தார். ஆனால் இப்போது அவர் நல்ல ஃபார்மில் இருந்தால் உத்தப்பாவை வைத்தே சமாளித்துவிடுவார் தோனி.

அம்பத்தி ராயுடு

அம்பத்தி ராயுடு

இதனையடுத்து தோனிக்கு 2வது வாய்ப்பாக அம்பத்தி ராயுடு உள்ளார். அம்பத்தி ராயுடு ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக தொடக்கத்தில் விளையாடி அசத்தியுள்ளார். இதனால், அம்பத்தி ராயுடுவை தொடக்க வீரராக அனுப்பி, சிஎஸ்கே அணி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொள்ளலாம்.

சேனாபதி

சேனாபதி

இவர்களை தவிர ஐபிஎல் ஏலத்தில் எடுத்த இளம் வீரர் ஒருவரும் தோனி மனதில் உள்ளார். சேனாபதி என்ற 24 வயதான வீரர் விஜய் ஹசாரே கோப்பையில் ஓடிசா அணிக்காக விளையாடி இருக்கிறார்.. 7 போட்டிகளில் அவர் 275 ரன்கள் விளாசியுள்ளார். அதில் ஒரு சதமும் அடங்கும்.இதே போன்று சையது முஸ்தாக் அலி தொடரிலும் சேனாபதி 5 போட்டிகளில் விளையாடி 138 ரன்கள் விளாசியுள்ளார். சேனாபதியின் பேட்டிங் ஸ்டைலும் கிட்டதட்ட ருத்துராஜை போல் இருக்கும்.

Story first published: Saturday, February 26, 2022, 18:19 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+