இந்த வீரர்களுக்கு இதுதான் கடைசி ஆசிய கோப்பை தொடரா இருக்குமோ?
யுஏஇ: ஆசிய கோப்பை போட்டிகள் நாளை தொடங்கி வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வரை யுனைடெட் அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கிறது. இப்போட்டி தொடரில் விளையாடும் வயதில் மூத்த வீரர்களை பற்றிய விவரம் இங்கே வழங்கபட்டுள்ளது.
அனேகமாக இதுவே இவர்களது கடைசி ஆசிய கோப்பை போட்டிகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
1 மஸ்ரபி மொர்தசா(34 வருடம் 345 நாட்கள்)
வங்கதேச அணியின் மூத்த வீரர்..சிறந்த வேகபந்துவீச்சாளர் மற்றும் கடைசி நிலையில் அதிரடியாக பேட்டிங் ஆடக்கூடிய வீரர். 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கெதிராக ஆட்டநாயகன் விருது வாங்கியவர். காயம் காரணமாக தற்போது பெரிய தொடர்களில் ஆடாமல் இருந்தவர் தற்போது மீண்டும் ஆசிய கோப்பை போட்டிகளில் களமிறங்கவுள்ளார்.

2 லசித் மலிங்கா (35 வருடம் 15 நாட்கள்)
இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பிடித்துள்ளார். தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வரும் இலங்கை அணிக்கு வெற்றி தேடிதருவார் என்ற நம்பிக்கையில் ஓராண்டிற்கு பிறகு அணியில் இடம்பிடித்துள்ளார்.
3 திலருவான் பெரேரா (36வருடம் 55நாட்கள்)
டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விரைவாக 50 மற்றும் 100 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை கொண்டவர். ஆனால் ஒருநாள் போட்டிகளில் பெரிதும் சோபிக்கவில்லை. அகிலா தனஞ்செயா சில போட்டிகளில் விளையாட இயலாத காரணத்தினால் இவருக்கு அணியில் இடம்பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.
4 சோயப் மாலிக் (36வருடம் 229நாட்கள்)
பாகிஸ்தான் அணிக்காக 1999 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் வீரர். இவரது சிறப்பான ஆல் ரவுண்டிங் ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவித்துள்ளது. இவர் இந்திய அணிக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது
5 மகேந்திர சிங் தோனி (37 வருடம் 70நாட்கள்)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி இந்த தொடரில் விளையாடும் வீரர்களில் அதிக வயதுடையவர். ஆனால் இவரது உடல்தகுதி தற்போதைய இளம் வீரர்களுக்கே சவால் விடும் வகையில் பராமரிப்பது இவரின் தனி அடையாளம். தோனி அடுத்தவருடம் உலகக்கோப்பை போட்டிகள் வரை இந்திய அணியில் ஆட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எண்ணமாகும். ஐசிசியின் அனைத்து வகையான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி என்பது அவரின் தனி சிறப்பு. அணியின் நலனுக்காக தனது கேப்டன் பதவியை துறந்தவர்.
Story first published: Friday, September 14, 2018, 22:52 [IST]
Other articles published on Sep 14, 2018


Click it and Unblock the Notifications