Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேற மாதிரி திரும்பி வந்திருக்கும் ராகுல்.. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என்ன?

மொஹாலி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் மொஹாலியில் 27 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தோற்கடித்தது கிடையாது.

இந்த நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை தற்போது பார்க்கலாம்.

List of Reason for india win vs australia in 1st odi

ஆசிய கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது நமது வீரர்களின் மனதளவில் உத்வேகத்தை அதிகரித்திருக்கிறது.இதனால் இந்திய அணி எடுக்கும் முயற்சிகளில் நம்பிக்கை பிறந்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நாம் முதலில் பாராட்ட வேண்டியது கேப்டன் கே எல் ராகுலை தான். கேப்டன் பதவிக்கு தகுதியே இல்லாத நபர் என ரசிகர்களால் முத்திரை சுத்தப்பட்ட ராகுல் காயத்திற்கு பிறகு முற்றிலும் வேறொரு நபராக திரும்பி இருக்கிறார்.

முகத்தில் தெளிவு , எடுக்கும் முடிவில் பொறுமை என களத்தில் சிறப்பாகவே செயல்பட்டார். சமி, பும்ராவை அவர் சுழற்சி முறையில் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை அட்டாக் செய்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது.

மேலும் அஸ்வின் மற்றும் ஜடேஜாவையும் சரியான நேரத்தில் ராகுல் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியை உண்டாக்கினார். இதேபோன்று இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக முகமது சமியின் பந்துவீச்சு இருந்தது .ஆஸ்திரேலிய தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடும் பழக்கத்தைக் கொண்டவர்கள். ஆனால் எடுத்த உடனே ஒரு நாக்அவுட் பஞ்சை கொடுத்து ஆஸ்திரேலியாவை தூங்க வைத்தார்.

முகமது சமிக்கு பும்ராவும் உறுதுணையாக நின்று ஆதரவு கொடுக்க 300 ரன்களுக்கு மேல் நாம் அடிக்க முடியாது என்ற உண்மையை ஆஸ்திரேலியா புரிந்து கொண்டது. 300 ரன்கள் அடித்து விட்டதால் அது மனதளவில் ஆஸ்திரேலியாவுக்கு சரிவையும் இந்தியாவுக்கு நம்பிக்கையும் கொடுத்தது. இதைப்போன்று பேட்டிங்கில் மற்றும் ருதுராஜ் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை அளித்தது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

எனினும் இருவரும் ஆட்டம் இழந்தவுடன் சூரியகுமார் யாதவும் இன்றைய ஆட்டத்தில் பொறுப்பாக விளையாடிய ரன்களை சேர்த்ததும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் கே எல் ராகுல் தான் ஏன் சிறந்த வீரர் என்பதை இன்று மீண்டும் ஒரு முறை பேட்டிங்கில் நிரூபித்து விட்டார்.

Story first published: Friday, September 22, 2023, 23:26 [IST]
Other articles published on Sep 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+