Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

500வது போட்டியில் விளையாடும் கோலி.. சச்சின், பாண்டிங் கூட வீணடித்த தருணம்.. கோலி சாதிப்பாரா?

போர்ட் ஆப் ஸ்பெயின் : சர்வதேச கிரிக்கெட்டில் இன்று விராட் கோலி 500 வது போட்டியில் விளையாடப் போகிறார் இந்த மிகப்பெரிய மைல்கல்லை எட்டும் நான்காவது இந்திய வீரர் மற்றும் உலக அளவில் பத்தாவது வீரர் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைத்திருக்கிறது.

முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 76 ரன்கள் சதத்தை தவறவிட்டார். இந்த நிலையில் விராட் கோலிக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

List of records of Players who scored runs on their 500 match in international cricket

இதுவரை 500 வது போட்டியில் விளையாடிய எந்த வீரர்களும் ஒருமுறை கூட அரை சதம் அடித்தது கிடையாது. இந்த நிலையில் விராட் கோலிக்கு தற்போது அந்த சாதனையை படைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவரை 500-வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்கள் அன்றைய மைல்கல் ஆட்டத்தில் எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 500-வது போட்டியில் 35 ரன்களில் ஆட்டம் இழந்திருக்கிறார். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனெ தன்னுடைய 500-வது போட்டியில் 11 ரன்களில் வெளியேறி இருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் சங்ககாரா தன்னுடைய 500 வது போட்டியில் அதிகபட்சமாக 48 ரன்கள் அடித்திருக்கிறார்.

List of records of Players who scored runs on their 500 match in international cricket

இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா தன்னுடைய 500-வது போட்டியில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்திருக்கிறார். இதேபோன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன்களின் கேப்டன் என்று அழைக்கப்படும் ரிக்கி பாண்டிங் தன்னுடைய 500-வது போட்டியில் வெறும் 44 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன் மகேந்திர சிங் தோனி தன்னுடைய 500-வது போட்டியில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அதேபோன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சையது அப்ரிடி தன்னுடைய 500-வது போட்டியில் 22 ரன்கள் எடுத்திருந்தார்.தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் தன்னுடைய 500 வது போட்டியில் ஆறு ரன்களும் தற்போதைய இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னுடைய 500-வது போட்டியில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்கள்.இதனால் கோலி குறைந்தபட்சம் அரை சதமாவது தனது 500-வது போட்டிகள் எடுப்பாரா என்ற ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இழந்துள்ளது.

Story first published: Thursday, July 20, 2023, 17:50 [IST]
Other articles published on Jul 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+