Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் படைத்த சாதனைகள்.. உலகத்திலேயே முதல் வீரர் என பெருமை.. இது புது தொடக்கம் என கருத்து

ராஜ்கோட் : இலங்கை எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்களை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3வது சதத்தை சூர்யகுமார் யாதவ் படைத்தார்.

கடந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர், சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த வீரர் போன்ற பெருமையை பெற்றார்.

இதன் மூலம் , இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் என்ற அந்தஸ்து சூர்யகுமார் யாதவ்க்கு கிடைத்தது. தற்போது புத்தாண்டிலும் சூர்யகுமார் அதே பார்மை தொடர்ந்தார்.

புதிய தொடக்கம்

புதிய தொடக்கம்

முதல் டி20 போட்டியில் 7 ரன்களில் ஆட்டமிழந்த சூர்யகுமார், 2வது டி20 போட்டியில் அரைசதம் கடந்தார். தற்போது 3வது டி20 போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசினார். இது குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், கடந்த ஆண்டு விளையாடியது, கடந்த ஆண்டிலேயே போய்விட்டது. தற்போது புதிய ஆண்டு, மீண்டும் புதியதாக ரன் சேர்க்க வேண்டும்.

யூகித்து விளையாடினேன்

யூகித்து விளையாடினேன்

நான் கடந்த ஒரு ஆண்டாக எந்த ஷாட்களை விளையாடினேனோ, அதே ஷாட்டை தான் இன்றும் விளையாடினேன். என்னுடைய ஸ்பெஷல் ஷாட்களை தொடர்ந்து பயிற்சி செய்தேன். பந்துவீச்சாளர்கள் பந்தை வீசும் முன்னே, அதனை யூகித்து என்னுடைய ஷாட்டை தேர்வு செய்து ஆடுவேன் என்று சூர்யகுமார் கூறினார்.

ஒரே வீரர்

ஒரே வீரர்

உங்களுடைய பேட் எடை குறைவாக உள்ளதா ,அதனால் தான் உங்களால் எளிதில் தூக்க முடியகிறதா என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த சூர்யா நிச்சயமாக பேட்டின் எடை கூடுதலாக தான் இருக்கும் என்று கூறினார். இந்த இன்னிங்ஸ் மூலம் டி20 கிரிக்கெட்டில் உலகத்திலேயே தொடக்க வீராகள் இல்லாமல் அதிகசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் படைத்திருக்கிறார்.

 சாதனை பட்டியல்

சாதனை பட்டியல்

இதே போன்று குறைந்த இன்னிங்சில் டி20 கிரிக்கெட்டில் 3 சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் சூர்யகுமார் யாதவ் படைத்திருக்கிறார்.5டி ரன்களுக்கு மேல் டி20 கிரிக்கெட்டில் தாண்டினால் அதிக ஸ்ட்ரைக் ரெட் வைத்திருக்கும் வீரர், டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 110 ரன்களை தாண்டிய வீரர், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த 2வது இந்திய வீரர் போன்ற பல சாதனைகளை சூர்யகுமார் யாதவ் படைத்திருக்கிறார்.

Story first published: Saturday, January 7, 2023, 21:27 [IST]
Other articles published on Jan 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+