Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை தொடருக்கு பிறகு, ஒவ்வொரு அணிகளும் பெற்ற வெற்றி, தோல்வி எவ்வளவு.. நம்பர் 1 அணி யார்?

மும்பை: 2024-ம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது. அதன் பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். இதனை அடுத்து புது முக வீரர்களைக் கொண்டு இந்தியா அணி டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது.

இந்த தருணத்தில் புதிய பயிற்சியாளராக களம் இறங்கிய கம்பீர தலைமையில் இந்திய அணி பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் 2024 டி20 உலக கோப்பைக்கு பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எந்த அணி எவ்வளவு வெற்றி தோல்விகளை பெற்றிருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

T20 Cricket Team Wins

இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி உள்ளது. இந்தியா 17 போட்டிகளில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி 13 வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது.

நியூசிலாந்து அணி 12 வெற்றி, மூன்று தோல்விகளை பெற்றுள்ளது. நான்காவது இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. பாகிஸ்தான் 9 வெற்றி, 13 தோல்விகளை தழுவியுள்ளது. ஐந்தாவது இடத்தில் ஜிம்பாப்பே அணி உள்ளதும் ஜிம்பாப்வே அணி 9 வெற்றி, 12 தோல்விகளை தழுவியுள்ளது.

ஆறாவது இடத்தில் வங்கதேச அணி உள்ளது. வங்கதேச அணி எட்டு வெற்றி, பத்து தோல்விகளை தழுவி உள்ளது. ஏழாவது இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இங்கிலாந்து 8 வெற்றி, 6 தோல்விகளை தழுவியுள்ளது. ஏழாவது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு வெற்றி, 18 தோல்வி தழுவி இருக்கிறது.

எட்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணி ஆறு வெற்றி 11 தோல்விகளை தழுவியுள்ளது. ஒன்பதாவது இடத்தில் உள்ள இலங்கை அணி 5 வெற்றி, 9 தோல்விகளை தழுவி இருக்கிறது. பத்தாவது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியும், 11-வது இடத்தில் உள்ள அயர்லாந்து அணி ஒரு வெற்றி மூன்று தோல்வியையும் தழுவி இருக்கிறது.

Story first published: Tuesday, August 12, 2025, 10:15 [IST]
Other articles published on Aug 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+