இந்திய அணியின் "மோஸ்ட் வான்டட்" பேச்சுலர்ஸ்.. மொய்க்கும் ரசிகைகள் - அட இங்கிலாந்திலுமா?
சவுத்தாம்ப்டன்: சவால் நிறைந்த கிரிக்கெட் களத்தில் நிற்கிறது இந்திய அணி. இதில், பல யங் வீரர்கள் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. இவர்கள் மீதான இந்த எக்ஸ்பெக்டேஷன்ஸ் பிசிசிஐ-யிடம் மட்டுமல்ல, இங்கிலாந்து இளம் பெண்களிடமும் உள்ளது.
ஆம்! இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதிலும் பரவலாக ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, இளம் இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஜாஸ்தி.
இந்திய வீரர்கள் எந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அங்கு குறைந்தது நான்கைந்து பதாகைகளில், "ஐ லவ் யூ" , "ஐ வாண்ட் டூ Marry யூ" போன்ற வாசகங்களை பார்க்கலாம். அந்த வகையில், இப்போது இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியில், எந்த வீரர்களுக்கு பெண் ரசிகைகளின் ஆதரவு இருக்க வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்.

ரசிகைகள் கிரேஸ்
இந்திய அணியின் பேச்சுலர்ஸ் லிஸ்டில் சிலர் இருந்தாலும், இந்த மூன்று வீரர்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் மற்றும் ஷுப்மன் கில். ஆம்! இம்மூன்று பேச்சுலர் வீரர்கள் மீது நிறைய இளம் ரசிகைகள் கிரேஸாக உள்ளனர் என்பதை நாம் இந்தியாவிலேயே பலமுறை பார்த்திருக்கிறோம். அந்த கிரேஸ் இந்தியா தாண்டி, இங்கிலாந்திலும் இருப்பதை காண முடிகிறது.

பண்ட் தோழி யார்?
ரிஷப் பண்ட்.. இந்திய இளம் வீரர்களில் மிக முக்கியமானவர். ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் சிங்கிள் ஹேண்டாக மேட்சை முடித்துக் கொடுத்தது மட்டுமின்றி, ஆறாவது டவுனில் களமிறங்கி எதிராணிகளுக்கு குடைச்சல் கொடுப்பதில் கில்லாடி. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் தனது அபார ஃபார்மை கன்டினியூ பண்ண, இந்திய அணியின் தவிர்க்க முடியா விக்கெட் கீப்பராக 25 சதவிகிதத்தை நிறைவு செய்துவிட்டார். பண்ட்டின் தோழி இஷா என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும், இவருக்கு இங்கிலாந்து ரசிகைகள் ஏகப்பட்ட உள்ளனர். ஸோ, நிச்சயம் ரிஷப் பண்ட்டை சந்திக்க ரசிகைகள் திரள்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

வெஸ்டர்ன் வாழ்க்கை
அடுத்தது லோகேஷ் ராகுல்.. இங்கிலாந்து தொடரில் பிளேயின் லெவனில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில், அவ்வளவு காம்படீஷன் நிலவுகிறது. ஏற்கனவே தன்னை நிரூபித்துள்ள ராகுலுக்கே அணியில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை என்றால், இது எவ்வளவு கடினமான தொடர் என்று பார்த்துக் கொள்ளுங்க. சரி விஷயத்துக்கு வருவோம். டேட்டூ, வெஸ்டர்ன் டிரஸ், வெஸ்டர்ன் லைஃப்ஸ்டைல், கட்டுமஸ்தான ஃபிஸிக் என்று இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏற்ற தேர்வு. ஸோ, லோகேஷ் ராகுலுக்காகவே ரசிகைகள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பாலிவுட் ஹீரோ
இறுதியாக ஷுப்மன் கில்.. இந்தியாவில் சச்சினின் மகள் சாராவுடன் டேட்டிங் என்று புகைந்த செய்திகளுக்கு சமீபத்தில், தனது ரசிகர்கள் உடனான இன்ஸ்ட்டா உரையாடல் மூலம் முற்றுப்புள்ளி வைத்தவர். 'என் மனதில் காதல் எனும் விஷயத்துக்கெல்லாம் இப்போது இடமே இல்லை" என்று சொல்லி அதிர வைத்தவர். இந்திய அணியின் யங் ஓப்பனர். நிச்சயம் அணியில் இவருக்கு இடம் கிடைக்கும் என்றே தெரிகிறது. கிரிக்கெட்டர் என்பதைத் தாண்டி ஒரு அட்டகாச பாலிவுட் ஹீரோவைப் போல இருக்கும் ஷுப்மனை ரசிக்காத ரசிகைகள் இருப்பார்களா என்ன?


Click it and Unblock the Notifications