
டாப் கிளாஸ் பேட்டிங்
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அறிமுக போட்டியிலேயே சதம் விளாசிய டெவோன் கான்வே 136 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் அவர் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.

125 ஆண்டு கால சாதனை
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், அயல்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் அறிமுக போட்டியிலேயே சதமடிப்பது 25 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் நடக்கிறது. கடைசியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தான் சதமடித்திருந்தார். அதன் பிறகு, கான்வே தான் இப்போது அடித்திருக்கிறார். அதேபோல், இன்றைய ஆட்டத்தில் கான்வே 150 ரன்களைக் கடந்தார். அப்போது அவர் 156 ரன்கள் எடுத்த போது, இங்கிலாந்து மண்ணில் அறிமுக டெஸ்ட் வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் 1896ம் ஆண்டு, ரஞ்சித்சிங்ஹ்ஜிஸ் என்பவர், இங்கிலாந்தில் தனது அறிமுக போட்டியில் 154 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதனை கான்வே இன்று முறியடித்துள்ளார்.

டாப் வீரர்கள் யார்?
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், கான்வே ஆட்டம் குறித்து சிலாகித்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். சரி.. கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு அணியிலும், அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் யார் என்ற பட்டியலை பார்க்கலாம்.
இங்கிலாந்து - கான்வே 167* (தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறார்)
ஆஸ்திரேலியா - டி ஃபாஸ்டர் 287, 1903
தென்.ஆப்பிரிக்கா - பி வார்னர் 132 *, 1899
வெஸ்ட் இண்டீஸ் - ரோவ் 214, '72
நியூசிலாந்து - சின்க்ளேர் 214, '99
இந்தியா - தவான் 187, '13
பாகிஸ்தான் - யாசிர் ஹமீத் 170, '03
இலங்கை - குருப்பு 201 *, '87
ஜிம்பாப்வே - ஹாக்டன் 121, '92
வங்கதேசம் - ருடால்ப் 222 *, '03

நியூசி., தடுமாற்றம்
இந்த புள்ளி விவரங்கள் ஒருபக்கம் இருக்க, நியூசிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. இன்று முதல் செஷனில் 3 விக்கெட்டுகளுடன் ஆட்டத்தை துவங்கிய நியூசிலாந்து, உணவு இடைவேளைக்கு முன்பாகவே அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது 295 ரன்களுக்கு அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.


Click it and Unblock the Notifications