Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகத்திலேயே இந்தியா தான் முதல் அணி.. ஒருநாள் கிரிக்கெட்டில் யாரும் தொட முடியாத சாதனை.. முழு விவரம்

சிட்டங்காங் : வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பல்வறு சாதனைகள் படைத்திருக்கிறது.

வங்கதேசத்திற்கு எதிராக தொடரை இந்திய அணி இழந்த நிலையில், கடைசி பேட்டியில் இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் விதமாக சிறப்பாக செயல்பட்டுள்ளது.

இதன் மூலம் செய்த தவறை இந்திய அணி திருத்தி கொண்டுள்ளது. இந்திய அணியின் இன்றைய அதிரடி ஆட்டம் மூலம், இனி இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது தெளிக விளங்கியுள்ளது.

அதிக முறை 400

அதிக முறை 400

ஷிகர் தவான் வங்கதேச தொடரில் மொத்தாக 3 இன்னிங்சில் விளையாடி 14 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் இளம் வீரர் இஷான் கிஷன் 3வது ஆட்டத்தில் 210 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 400 ரன்களை அதிக முறை விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

அதிக சதம்

அதிக சதம்

இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் 6 முறை 400 ரன்களும், இங்கிலாந்து 5 முறை 400 ரன்களும் அடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 2 முறை தான் 400 ரன்களை அடித்துள்ளது. இதே போன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சதங்களை விளாசிய ஒரே அணி என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது. இந்தியாவின் முதல் சதத்தை கபில்தேவும், 100வது சதத்தை கங்குலியும்,200 வது 300வது சதத்தை விராட் கோலியும் பதிவு செய்துள்ளார்.

வெளிநாட்டில் சதம்

வெளிநாட்டில் சதம்

இதே போன்று வெளிநாட்டில் நடைபெறும் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் 29 முறை அடித்து முதல் இடத்திலும், விராட் கோலி 25 முறை விளாசியும் அசத்தி இருக்கிறார்கள். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை இரட்டை சதம் சிளாசிய அணி என்ற பெருமையையும் இந்தியா படைத்துள்ளது.

அதிக இரட்டை சதம்

அதிக இரட்டை சதம்

இந்திய அணி வீரர்கள் 6 முறை இரட்டை சதம் அடித்துள்ள நிலையில், மற்ற அணி வீரர்கள் எல்லாம் ஒரு முறை மட்டும் தான் அடித்துள்ளனர். இதே போன்று வங்கதேச மண்ணில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையையும் இந்திய அணி படைத்துள்ளது. இதே போன்று வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை கோலி படைத்தார்.

Story first published: Saturday, December 10, 2022, 17:46 [IST]
Other articles published on Dec 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+