Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒவ்வொரு அணிக்கும் எதிராக இந்தியா வென்ற டெஸ்ட் போட்டிகள் எத்தனை? தோல்வியும் எவ்வளவு?

மும்பை : டி20,ஒருநாள் கிரிக்கெட் சீசன் நடைபெற்றது போல் தற்போது டெஸ்ட் போட்டிகள் சீசன் தொடங்க உள்ளது. இந்திய அணி அடுத்த இரண்டு மாதத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதேபோன்று அடுத்த ஐந்து மாதத்தில் 10 டெஸ்ட் போட்டிகள் இந்தியா விளையாடுகிறது.

இதில் 5 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். இந்த சூழலில் இந்திய அணி இதுவரை பத்து நாடுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் ஒவ்வொரு நாட்டிற்கும் எதிராக எத்தனை டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது என்பதை தற்போது பார்க்கலாம்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றியை பெற்றிருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.18 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 23 போட்டிகளில் வென்றிருக்கிறது. 30 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, 12 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 35 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. இங்கிலாந்தின் 51 போட்டிகளில் வென்றுள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது இந்தியா 22 போட்டிகளில் வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 32 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 45 போட்டிகளில் வெற்றி இருக்கிறது.வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 11 போட்டிகளில் வென்றிருக்கிறது.

இதில் வங்கதேச அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஜிம்பாப்வே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 22 போட்டிகளிலும் நியூசிலாந்து 13 போட்டிகளிலும் வென்றிருக்கிறது. பெரிய அணிகளுக்கு எதிராக இந்தியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அடிகளுக்கு எதிராக மட்டுமே அதிக வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, September 15, 2024, 17:36 [IST]
Other articles published on Sep 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+