Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னது 2017ல் இவர்தான் பெஸ்டா?... பவுலிங்கில் முதல் இடம் பிடித்த ஆப்கான் வீரர்!

சென்னை: 2017ல் கிரிக்கெட் உலகில் பல்வேறு அணியை சேர்ந்த பவுலர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் அணியில் தொடங்கி ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த வீரர்கள் வரை பலர் பந்து வீச்சில் சாதனை படைத்து உள்ளனர்.

குறைந்த போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்த அஸ்வின் இந்த வருடம் தான் 300 விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். அதேபோல் இந்த பட்டியலில் எதிர்பாராத வகையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பவுலர் ஒருவர் முதல் இடம் பிடித்து இருக்கிறார்.

பல பெரிய வீரர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு இவர் முதல் இடத்தில் இருக்கிறார். பவுலிங்கில் சிறப்பாக வருவார்கள் என்று நினைத்த வீரர்கள் பலர் இந்த பட்டியலில் இடம்பிடிக்க முடியாமல் போய் உள்ளனர்.

பும்ரா

பும்ரா

இந்த வருடத்தில் இந்திய வேகப்பந்து வீச்சில் புதிய புலியாக உருவெடுத்தார் பும்ரா. கடைசி ஓவர்களில் சிறந்த பந்து வீசும் நபர் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பும்ரா பெயரை கூறலாம். 21 போட்டிகளில் விளையாடி இவர் 36 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் மொத்தமாக 12 மெய்டன் ஓவர்கள் போட்டு இருக்கிறார். 23 வயதே நிரம்பிய இவர் இந்திய அணியில் பெரிய வேகப்பந்து வீச்சாளராக மாறி வருகிறார்.

சாதனை நாயகன் ஹசன் அலி

சாதனை நாயகன் ஹசன் அலி

ஹசன் அலி இந்த வருடத்தை சாதனையுடன்தான் தொடங்கினார். ஜனவரி 22ல் ஆரம்பமே ஐந்து விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிராக ஹசன் அலி ஆடியது ருத்ர தாண்டவம். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மிகவும் அதிக விக்கெட் எடுத்து 'பிளேயர் ஆப் டோர்னமெண்ட்' பட்டம் வாங்கினார். அந்த தொடரில் மட்டும் அவர் 13 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் இந்த பட்டியலில் இவர் 4ம் இடம் பிடித்துள்ளார்.

ரவிசந்திரன் அஷ்வின்

ரவிசந்திரன் அஷ்வின்

அஷ்வின் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த வருடம் கொஞ்சம் மோசமாகதான் இருந்தது. நல்ல பார்மில் இருந்தாலும் அணியில் இடம் கிடைக்காமல் திணறி வந்தார். டெஸ்ட் அணிக்கு மட்டும் தான் இனி அஷ்வின் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் தன்னை ஒதுக்கியவர்கள் எல்லோருக்கும் இவர் தன்னுடைய சாதனைகளால் பதில் அளித்தார். அதிவேகமாக 300 விக்கெட் எடுத்து இந்த வருடம் இவர் சாதனை படைத்தார். வெறும் 11 டெஸ்ட் போட்டிகளை விளையாடி இவர் 56 விக்கெட்டுக்களை இந்த வருடம் வீழ்த்தி இருக்கிறார்.

நாதன் லியான்

நாதன் லியான்

இந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர் நாதன் லியான். ஆஸ்திரேலிய வீரரான இவர் தற்போது நடக்கும் ஆஷஸ் தொடரிலும் கலக்கி வருகிறார். இந்த வருடம் மட்டும் இவர் மொத்தம் 60 விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார். அதேபோல் இவர் தனது பெஸ்ட்டான 50 ரன்களுக்கு 8 விக்கெட் எடுத்து சாதனை படைத்து இருக்கிறார்.

முதல் இடம்

முதல் இடம்

யாரும் எதிரிபார்க்காத வகையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் முதல் இடம் பிடித்து இருக்கிறார். இந்த வருடம் இவருக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. மொத்தமாக விளையாடிய வெறும் 16 போட்டிகளில் இவர் 43 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். விக்கெட் எடுப்புகளின் படி கணக்கிட்டால் இவர் சராசரியாக போட்டிக்கு 3.8 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 2017ம் வருடத்தில் இவருடைய சராசரியே அதிகம் ஆகும். இவர் இரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இவருடைய சிறந்த பவுலிங்கான 7/18 என்பதும் இந்த வருடம் தான் நடந்தது.

Story first published: Wednesday, December 20, 2017, 16:42 [IST]
Other articles published on Dec 20, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+