Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுண்டரி.. சிக்ஸர்.. சதம்.. 2017ல் கிரிக்கெட் உலகில் கெத்து கட்டிய பேட்ஸ்மேன்கள்!

சென்னை: 2017ல் கிரிக்கெட் உலகில் சில பேட்ஸ்மேன்கள் மிகவும் அபாரமாக விளையாடி இருக்கிறார்கள். இந்திய அணியில் தொடங்கி ஆஸ்திரேலிய அணி வரை ஒவ்வொரு அணியிலும் சில வீரர்கள் கிரிக்கெட் ரசிகர்களை தங்கள் பேட்டிங் மூலம் கட்டிப்போட்டு உள்ளனர்.

இந்த வருடம் ஒவ்வொரு அணியிலும் நிறைய புது வீரர்கள் அறிமுகம் ஆனார்கள். ஆனால் எப்போதும் போல சில ஜாம்பவான் வீரர்கள்தான் இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் உலகிற்கு இந்த வருடம் மிகவும் சிறப்பாகவே இருந்தது. இன்னும் சில வருடங்கள் போனால் சிறந்த வீரர்களின் பட்டியலில் அனைத்து இடங்களையும் இந்திய வீரர்களே பிடிக்க முடியும் என்று கூட கூறலாம்.

ஐந்தாவது இடம்

ஐந்தாவது இடம்

தென்னாபிரிக்க அணிக்கு இந்த வருடம் பெரிய சாதனையும், பெரிய சோதனையும் இல்லாமல் கடந்து போனது. ஆனாலும் அந்த அணியின் குவின்டன் டி காக் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவரை இவர் 16 செஞ்சுரிகள் அடித்துள்ளார். 2012ல் டி-20 போட்டியில் அறிமுகம் ஆன இவர் இந்த வருடம் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். இந்த வருடம் 19 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி இவர் 956 ரன்கள் அடித்துள்ளார். இந்த வருடத்தின் படி இவரது ஸ்ட்ரைக் ரேட் 98.84 ஆகும். இந்த வருடம் தான் இவர் தனது அதிகபட்ச ரன்னான 168 ரன்களை அடித்தார்.

ஜோ ரூட் சாதனை

ஜோ ரூட் சாதனை

ஜோ ரூட், கோஹ்லி, ஸ்டிவ் ஸ்மித் , கேன் வில்லியம்சன் ஆகிய நான்கு பேரும் 'பேப் போர்' என்ற சிறந்த வீரர்களின் பட்டியலில் இருக்கிறார்கள். இந்த வருடம் மட்டும் இவர் 983 ரன்கள் அடித்தார். ஸ்டிரைக் ரேட் 70.21 வைத்துள்ளார். அதிரடியாக 7 அரைசதமும், இரண்டு சதமும் அடித்துள்ளார். இங்கிலாந்து அணியில் இப்போதும் இவர்தான் சிறந்த வீரராக உள்ளார். ஜானி பிரெய்ஸ்டோவ், ஜேசன் ராய் ஆகியோரும் இந்த இடத்திற்கு தகுதியானவர்கள்தான்.

சர்மா..ரோஹித் சர்மா

சர்மா..ரோஹித் சர்மா

ரோஹித் சர்மாவிற்கு இந்த வருடம் மிக சிறப்பான வருடம். 2013ல் இருந்து இவர் பார்ம் இழக்காமல் ஆடி வருகிறார். டெஸ்ட் அணியில் அதிகமாக திணறும் ரோஹித் இந்த வருடம் அதையும் சரி செய்தார். மொத்தம் இந்த வருடம் மட்டும் 1286 ரன்கள் அடித்துள்ளார். மேலும் கடைசியாக இலங்கைக்கு எதிராக 208 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

ஸ்டிவ் ஸ்மித் சாதனை

ஸ்டிவ் ஸ்மித் சாதனை

ஆஷஷ் தொடரில் ஸ்டிவ் ஸ்மித் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். மொத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகமே எங்கள் அணிக்கு இன்னொரு டான் பிராட்மேன் கிடைத்துவிட்டார் என்று சந்தோசமாக இருக்கிறது. கோஹ்லிக்கு அடித்தபடியாக ஏ.பி.டிவில்லியர்ஸா, கேன் வில்லியம்சனா என்ற பட்டியலில் தற்போது ஸ்டிவ் ஸ்மித் இடம்பிடித்துள்ளார். இப்போதும் கூட டெஸ்டில் ஸ்டிவ் ஸ்மித் கோஹ்லியை விட ஒருபடி மேலே இருக்கிறார். 50 வருடத்திற்கு பின் ஆஷஸ் தொடரில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான்.

நம்பர் 1 கோஹ்லி

நம்பர் 1 கோஹ்லி

இந்த வருடத்தின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால் ஏலியன் கூட கோஹ்லிதான் என்று கூறும். இவர் காட்டில் இந்த வருடம் ரன் மழை அடித்தது. டெஸ்ட் இரட்டை சதம். 50வது ஒருநாள் சதம். வேகமாக 9000 ரன்கள் என்று இவர் ருத்ரதாண்டவம் ஆடினார். தற்போது ஒருநாள் மற்றும் டி-20 பேட்ஸ்மேன்களில் இவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்த வருடம் டெஸ்ட் பேட்ஸ்மேன் வரிசையிலும் முதல் இடம்பிடித்து ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிப்பார் என்று நம்பலாம்.

Story first published: Wednesday, December 20, 2017, 15:32 [IST]
Other articles published on Dec 20, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+