Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடரும் பாஜக ஆட்சி! இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன நடக்கும்? என்ன எதிர்பார்க்கலாம்?

மும்பை : கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் டி20 உலக கோப்பை என பிசியாக இருந்த இந்த தருணத்தில் தான் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக இந்தியாவின் பொது தேர்தல் நடைபெற்றது. தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவு இன்று அறிவிக்கப்பட்டது.

இதில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க போகிறது. இந்த நிலையில் இது கிரிக்கெட்டுக்கு எந்த அளவுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை தற்போது பார்க்கலாம்.

lok sabha election bcci jay shah india national cricket team 2024


பாஜக ஆட்சி தொடர்ந்தால் பிசிசிஐயில் ஜெய்ஷாவின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும். ஜெய்ஷாவை அசைக்க முடியாத நபராக மேலும் திகழ்வார். தற்போது பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய்ஷா ஐசிசி தலைவராக கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரை ஜெயிஷா சொல்வதுதான் சட்டம்.

அது மட்டுமல்லாமல் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர் நடைபெற கொஞ்சம் கூட வாய்ப்பு கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து விளையாடுவதையும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதையும் பாஜக அரசு அனுமதி அளிக்காததை கொள்கை முடிவாக வைத்திருக்கிறார்கள்.

இதனால் பாஜக ஆட்சி நடைபெறும் வரை இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நிச்சயம் நடக்காது. அது மட்டுமில்லாமல் பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியும் செல்ல வாய்ப்பு கிடையாது. பாகிஸ்தானுக்கு செல்ல பாஜக அரசு இந்திய கிரிக்கெட் அணிக்கு அனுமதி அளிக்காது.

இதேபோன்று பாஜகவை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பிசிசிஐயில் ஆதிக்கம் செலுத்துவார்கள். மேலும் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிரிக்கெட் சங்கங்களில் இருக்கும். பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து தங்களது பணியை செய்வார்கள். இதில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. மேலும் ஐசிசி தொடர்கள் இந்தியாவில் நடத்தப்பட்டால் அதற்கு வரி விலக்கும் மத்திய அரசிடமிருந்து கிடைக்காது.
Story first published: Tuesday, June 4, 2024, 20:35 [IST]
Other articles published on Jun 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+