Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் தனித்துவமானவர்.. சொல்கிறார் ஷெல்டன் காட்ரெல்

டெல்லி : ஐபிஎல் 2020 தொடருக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த பௌலர் ஷெல்டன் காட்ரெல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 8.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

Recommended Video

IPL 2020: Kings XI Punjab: Strength, Weakness, Squad, IPL prediction

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தான் கேஎல் ராகுலிடம் பேசியதாகவும் அவர் தனித்துவமானவர் என்றும் காட்ரெல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக பங்கேற்று ஆடவுள்ள காட்ரெல், கேஎல் ராகுலின் தனித்துவமான கேப்டன்ஷிப்பை தான் நேரிடையாக பார்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அணி வீரர் ஷெல்டன் காட்ரெல்

அணி வீரர் ஷெல்டன் காட்ரெல்

ஐபிஎல் போட்டிகள் வரும் மாதம் 19ம் தேதி யூஏஇயில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் வரும் 20ம் தேதியையொட்டி தங்களது பயணங்களை துவக்கவுள்ளனர். இதனிடையே ஐபிஎல் ஏலத்தில் 8.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் பௌலர் ஷெல்டன காட்ரெல் முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

ராகுலின் கேப்டன்ஷிப்பை காண ஆவல்

ராகுலின் கேப்டன்ஷிப்பை காண ஆவல்

இவர் தன்னுடைய அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் மற்றும் நிகோலஸ் பூரன் ஆகியோருடன் இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளார். இந்நிலையில் தன்னுடைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தனித்துவமானவர் என்று ஷெல்டன் காட்ரெல் தெரிவித்துள்ளார். அவர் எவ்வாறு கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் என்பதை பார்ப்பதற்காக தான் மிகுந்த ஆவலுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

120% திறமையை காட்டுவேன்

120% திறமையை காட்டுவேன்

இந்திய பௌலர் முகமது ஷமியுடனும் விளையாடுவதில் தான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும் காட்ரெல் கூறியுள்ளார். இந்த தொடரில் தான் தன்னுடைய 120 சதவிகித திறமையை காட்டவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்காக இந்த ஐபிஎல் தொடரில் தான் முழங்காலிட்டு தன்னுடைய ஆதரவை தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

12 விக்கெட்டுகளை வீழ்த்திய காட்ரெல்

12 விக்கெட்டுகளை வீழ்த்திய காட்ரெல்

மேலும் ஐபிஎல்லில் கேஎல் ராகுல் மற்றும் முகமது ஷமியின் அனுபவங்களை பெறவும் தான் ஆவலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் காட்ரெல் மிகவும் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தினார். அந்த தொடரில் அவர் 12 விக்கெட்டுகளை 8.25 சராசரியுடன் வீழ்த்தினார்.

Story first published: Tuesday, August 11, 2020, 20:53 [IST]
Other articles published on Aug 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+