கிறிஸ் வோக்ஸ் அபார சதம்.. லார்ட்ஸ் டெஸ்ட்.. மூன்றாம் நாள் டாப் 5!
லார்ட்ஸ்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்ற நிலையில் லார்ட்ஸில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

மழையின் காரணமாக முதல் நாள் போட்டி நடைபெறாத நிலையில் நேற்று இரண்டாம் நாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மூன்றாம் நாள் போட்டி நேற்று மழையின் இடையூறு இன்றி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இதோ:
1 கிறிஸ் வோக்ஸ் அபார சதம்
இங்கிலாந்து அணியின் ஆல் ரௌண்டர் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார். 7 ஆம் நிலையில் களமிறங்கி அவர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. அவர் அடித்த ரன்கள்(120*) இந்திய அணியின் மொத்த ரன்களை விட அதிகம்.
2 பேர்ஸ்டாவ்-வோக்ஸ் பார்ட்னெர்ஷிப்
இந்திய அணி போட்டியின் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி 131/5 என்ற நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய பேர்ஸ்டாவ் மற்றும் வோக்ஸ் சிறப்பாக ஆடி 189 ரன்களை குவித்தனர்.
3 சதத்தை தவறவிட்ட பேர்ஸ்டாவ்
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டாவ் சிறப்பாக விளையாடி 93 ரன்களை எடுத்தார். அவர் 7 ரன்களில் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
4 எடுபடாத இந்திய சுழல் பந்துவீச்சு
முதல் இரண்டு நாட்கள் பெய்த மழை காரணமாக ஆடுகளம் முழுவதுமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கே சாதகமாக உள்ளது. இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களால் எந்த விதத்திலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை.
5 250 ரன்கள் முன்னிலை
இந்திய அணி முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் 250 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்று அதிரடியாக ஆடி மேலும் ரன்களை குவித்தால் இந்திய அணிக்கு தோல்வியை தவிர்ப்பது கடினமே.
Story first published: Sunday, August 12, 2018, 12:43 [IST]
Other articles published on Aug 12, 2018


Click it and Unblock the Notifications