Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MLC 2026 Final: கடைசி பந்தில் த்ரில் வெற்றி.. வாஷிங்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற நைட் ரைடர்ஸ்

நியூயார்க்: 2026 மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடைசி ஓவரின் கடைசிப் பந்து வரை நீடித்த இந்த ஆட்டம் மிகச் சிறந்த த்ரில்லர் போட்டிகளில் ஒன்றாக மாறியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணிக்கு தொடக்க வீரர்களான கோலின் மன்ரோ 40 ரன்களும், ஆண்ட்ரே பிளெட்சர் 47 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். மேத்யூ டிராம்ப் 21 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். வாஷிங்டன் தரப்பில் பென் டுவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளைப் வீழ்த்தினர். ரச்சின் ரவீந்திரா மற்றும் நிகில் சவுத்ரி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Los Angeles Knight Riders win MLC 2026 title with 1 run victory over Washington Freedom in final

இதை அடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வாஷிங்டன் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டது. ஷாட்லி வான் ஷால்க்விக் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஓபஸ் பினார் சிக்ஸர் அடிக்க ஆட்டம் வாஷிங்டன் பக்கம் திரும்பியது. ஆனால், அடுத்த பந்திலேயே பினாரை போல்டாக்கிய ஷால்க்விக், 3வது பந்தில் இயான் ஹாலண்டையும் அவுட்டாக்கினார்.

4வது பந்தில் லாக்கி பெர்குசன் பவுண்டரி அடிக்க, ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது, லாஹிரு மிலாந்தா ரன்-அவுட் ஆனார். இதனால் வாஷிங்டன் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கம்பீரின் செய்கையை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த ரோஹித்.. லார்ட்ஸ் பால்கனியில் நடந்த சம்பவம்

கம்பீரின் செய்கையை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த ரோஹித்.. லார்ட்ஸ் பால்கனியில் நடந்த சம்பவம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் முக்கியக் காரணமாக அமைந்தார். அவர் 4 ஓவர்களில் வெறும் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கேப்டன் ஜேசன் ஹோல்டரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தார்.

“இங்கிலாந்து தான் ஜெயிக்கும்.. இந்தியாவுக்கு வாய்ப்பு குறைவு ஏன்னா..

“இங்கிலாந்து தான் ஜெயிக்கும்.. இந்தியாவுக்கு வாய்ப்பு குறைவு ஏன்னா.." கபில் தேவ் அதிரடி
Story first published: Sunday, July 19, 2026, 10:36 [IST]
Other articles published on Jul 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+