பைனலில் எங்களுக்கு எதிராக நிறைய விஷயங்கள் நடைபெற்றன...!! அதிர்ச்சி தந்த கேன் வில்லியம்சன்
Recommended Video
லார்ட்ஸ் : இறுதிப்போட்டியில் எங்களுக்கு எதிராக நிறைய விஷயங்கள் நடைபெற்று விட்டதாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பரபரப்பு கருத்தை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து, நியூசிலாந்து இடையேயான உலககோப்பை பைனல் லாட்ர்ஸ் மைதானத்தில் நடை பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து, 242 ரன்களை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லாதம் 47 ரன்களும் மற்றும் கேன் வில்லியம்சன் 30 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்தது. டை ஆனதால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

அதிக பவுண்டரிகள்
அதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து, ஒரு ஓவரில் 15 ரன்களை எடுத்தது. தொடர்ந்து, நியூசிலாந்தும் 15 ரன்களை எடுத்தது. அதனால் போட்டி மறுபடியும் சமனில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் (இங்கிலாந்து 24, நியூசிலாந்து 16) அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நியூசி. சோகம்
இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி இங்கிலாந்து புதிய சரித்திரம் படைத்துள்ளது. பவுண்டரி விவகாரத்தால் கோப்பையை பறிகொடுத்த நியூசிலாந்து வீரர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

நிறைய விஷயங்கள்
இங்கிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து கேன் வில்லியம்சன் கூறியதாவது: போட்டியில் எங்களுக்கு எதிராக நிறைய விஷயங்கள் நடைபெற்றன. இங்கிலாந்துக்கு எனது வாழ்த்துக்கள்.

நாள் கிடையாது
இந்த வெற்றிக்கு இங்கிலாந்து, முழு தகுதியானது தான். இந்த போட்டி மிகவும் சவாலானது. பிட்ச்சின் தன்மையையும் நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை. எங்கள் வீரர்கள் இறுதி வரை கடுமையாக போராடினர். ஆனாலும் தோற்று விட்டோம். இருந்தாலும் இது எங்களுக்கான நாள் கிடையாது என்றார்.


Click it and Unblock the Notifications