Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சிரிப்புக்கு பின்னால் ஒளிந்த சோகங்கள்” டிக்டாக் நாயகன் ”வார்னரை” பதம் பார்த்த 2021ம் ஆண்டு - அலசல்

சென்னை: எப்போதும் சிரித்த முகத்துடன் மட்டுமே இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின், சீரியஸான பக்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது 2021ம் ஆண்டு.

Recommended Video

Retirement பற்றி David Warner என்ன சொன்னார் தெரியுமா ? | OneIndia Tamil

இந்தியாவில் உள்நாட்டு வீரர்களை தவிர்த்து அவ்வளவு எளிதாக வேறு எந்த நாட்டு வீரர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உருவாகாது. அப்படி உருவாகியதில் சமீபத்திய ட்ரெண்டிங்கில் உள்ளவர் டேவிட் வார்னர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை வார்னர் என்றாலே காட்டடி அடிக்கக்கூடியவர், எளிதில் அவுட்டாக மாட்டார் என்ற பேச்சுக்கள் தான் அதிகம் இருக்கும்.

ரசிகர்கள் பட்டாளம்

ரசிகர்கள் பட்டாளம்

ஆனால் கொரோனா ஊரடங்கின் போது அவர் மீது அனைவருக்கும் இருந்த எண்ணங்கள் முற்றிலும் மாறுபட்டது. அடிக்கடி டிக்டாக் செய்வது, குடும்பத்தினருடன் டான்ஸ் ஆடுவது போன்ற புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் மிகவும் குஷியாக வலம் வந்தார். "அவர யாராச்சும் கட்டுப்படுத்துங்களேன்பா" என்று கூறும் அளவிற்கு டிக்டாக்கில் சேட்டை செய்து வந்தார்.

சோகமான வருடம்

சோகமான வருடம்

இப்படி மிகவும் ஜாலியாக வலம் வந்த அந்த வீரருக்கு தான் 2021ம் ஆண்டு சோக பரிசு ஒன்றை கொடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்த ஐதராபாத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கோப்பையையும் வென்று கொடுத்த கேப்டன் டேவிட் வார்னர். ஆனால் அவை எதற்குமே மதிப்பில்லை என்பது போல இந்தாண்டு அவரை தூக்கி எறிந்தது ஐதராபாத் அணி.

என்னதான் பிரச்சினை

என்னதான் பிரச்சினை

வீரர்களை தேர்வு செய்வதில் ஒரு கேப்டனாக தன்னிடம் கருத்துக் கேட்பதில்லை என பொதுவெளியிலேயே தனது சிரமத்தை வார்னர் கூறினார். இதில் தொடங்கிய பிரச்சினை தான் சில நாட்களில் பூதாகரமானது. தொடர் நடந்துக்கொண்டிருந்த போதே வார்னர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். பிறகு டேவிட் வார்னரை ப்ளேயிங் 11ல் இருந்தும் அதிரடியாக நீக்கியது ஐதராபாத் அணி நிர்வாகம்.

புறக்கணிக்கப்பட்ட வார்னர்

புறக்கணிக்கப்பட்ட வார்னர்

கேப்டனாக இருந்த வார்னர் அதற்கு அடுத்தப் போட்டியிலேயே பவுண்டரி எல்லைக்கு வெளியே இருந்து குளிர்பானங்களை எடுத்துக்கொண்டு சென்ற புகைப்படங்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனை விட கொடுமையான விஷயம் என்னவென்றால் ஒரு போட்டியின் போது, டேவிட் வார்னர் அணியினருடன் உட்காராமல், ரசிகர்கள் அமரும் இடத்தில் தனியாக உட்கார்ந்து ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அவரை அணி இருக்கும் இடத்திலேயே அமரக்கூடாது என உத்தரவு போட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அப்போதும் அவர் தனது அணியை விட்டுக்கொடுக்காமல் அங்கிருந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார்.

வார்னருக்கு வந்த வலிகள்

வார்னருக்கு வந்த வலிகள்

"என்ன மனுஷன்யா இவர்" என்று கூறும் அளவிற்கு ஐதராபாத் அணி கொடுத்த வலிகளையும் சிரித்த முகத்தோடே ஏற்றுக்கொண்டார். இனி அந்த அணிக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்பதை மெகா ஏலத்திற்கு முன்பாகவே அறிவித்தார். ஃபார்ம் அவுட் ஆன வீரர், அடுத்த ஏலத்தில் யார் எடுக்கப்போகிறார்கள் என்ற பேச்சுக்கள் எழுந்தன. ஐதராபாத் அணியே சில பதிவுகளில் மறைமுகமாக கிண்டலடித்து இருந்தது.

பதிலடி

பதிலடி

இந்நிலையில் அவை அனைத்திற்கும் காட்டுத்தனமான பதிலடியை ஆண்டின் இறுதியில் கொடுத்துவிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் முதல் மூன்று போட்டிகளையும் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் வார்னர். முதல் டெஸ்டில் 94, 2வது டெஸ்டில் 95, 3வது டெஸ்டில் 38 என அடுத்தடுத்து ரன் வேட்டை நடத்தினார்.

ஜாக்பாட்

ஜாக்பாட்

வார்னரின் ஃபார்மை பார்த்த வல்லுநர்கள் சிலர், ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு போகக்கூடியவர் என பாராட்டியுள்ளனர். ஐதராபாத் அணி நிர்வாகமே, வார்னரை குறிப்பிட்டு, இந்தாண்டு ஐபிஎல் மெகா ஏலம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கப்போகிறது என வாழ்த்து தெரிவித்துள்ளது. இதனால் 2022ம் ஆண்டில் கொடுக்கப்போகும் அதிரடிகளுக்கு தற்போதே வார்னர் ட்ரைலரை வெளியிட்டுவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். நிச்சயம் இதற்கு ஐதராபாத் அணி வருத்தப்படும் என்றும் கூறி வருகின்றனர்.

Story first published: Thursday, December 30, 2021, 14:55 [IST]
Other articles published on Dec 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+