Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமெடியாக மாறிய காதல் பிரபோசல்.. இந்திய போட்டியில் நடந்த சுவாரஸ்யம்.. இப்படி ஆகிடுச்சே கோபால்!!

சிட்னி: இந்திய அணி போட்டியின் போது இளைஞர் செய்த பிரபோசல் இணையத்தில் வேடிக்கை சம்பவமாக மாறியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து கடினமான இலக்கை நிர்ணயித்தது.

இந்திய இன்னிங்ஸ்

இந்திய இன்னிங்ஸ்

தொடக்கத்தில் இந்தியாவின் ரன்ரேட் குறைவாக இருந்த போதும் கடைசி நேரத்தில் கோலி - சூர்யகுமார் போராடியதால் 20 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 53 ரன்கள், விராட் கோலி 62 ரன்கள் மற்றும் கடைசி நேரத்தில் சூர்யகுமார் யாதவ் 51 ரன்களையும் விளாசினார்.

இளைஞரின் செயல்

இளைஞரின் செயல்

இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் கடைசி நேர அதிரடியை தாண்டி மற்றொரு சுவாரஸ்ய சம்பவமும் நிகழ்ந்தது. ஆட்டத்தின் போது மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர், திடீரென ஒரு மோதிரத்தை எடுத்து, தனது காதலிக்கு காதலை வெளிப்படுத்தினார். மண்டியிட்டு அவர் நீண்ட நேரமாக தன்னை திருமணம் செய்துக்கொள்கிறீர்களா? எனக்கேட்ட போதும் அந்த பெண் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

பெண்ணின் பதில்

பெண்ணின் பதில்

என்ன இது? அப்பெண் சரி என்றே கூற மாட்டிக்கிறீர்கள் என நினைத்து பொறுமை இழந்த அந்த இளைஞர், அவசர அவசரமாக விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டார். அதன்பின்னர் அப்பெண்ணும் தனக்கு சம்மதம் எனக்கூறி கட்டிப்பிடித்தனர். கிரிக்கெட் போட்டிக்கு நடுவே காதலை பரிமாறிக்கொண்ட சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

காமெடி நிகழ்வு

காமெடி நிகழ்வு

ஆனால் இந்த அழகான நிகழ்வையும் காமெடியாக்கினார் பின்னால் இருந்த மற்றொரு ரசிகர். அதாவது அந்த ஜோடி பிரபோஸ் செய்துக்கொண்டிருந்த போது, பின்னால் இருந்த மற்றொரு ரசிகர் பதாகையை கேமிராவுக்கு காட்டிக்கொண்டே இருந்தார். அதில் " வீட்டு முறை சமையலில் உணவு விற்கப்படும், எனக்குறிப்பிட்டு, தொடர்பு கொள்ளும் விவரங்களையும் சேர்த்திருந்தார். இது இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, October 27, 2022, 16:06 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+