Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 ஆண்டுகளுக்கு பின்.. முதல் குழந்தையை வரவேற்ற ஜாகீர் கான் - சாகரிகா.. என்ன குழந்தை தெரியுமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஜாகீர் கான் மற்றும் நடிகை சாகரிகா கட்கே தம்பதியினர் தங்களின் முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர். 2017ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில், 8 ஆண்டுகளுக்கு பின் சாகரிகா கட்கேவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு இருவரும் சேர்ந்து வைத்துள்ள பெயர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர் கான். 2000ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக கங்குலி தலைமையின் கீழ் அறிமுகமான ஜாகீர் கான், 2014ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி வந்தார். 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர்.

LSG Mentor Zaheer Khan and sagarika Ghatge welcomes baby boy after 8 years of Marriage life

2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ஜாகீர் கான். அதேபோல் இந்திய வேகப்பந்துவீச்சின் அடையாளத்தை சர்வதேச அளவில் மாற்றியவரும் இவர் தான். பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம், ஜாகீர் கானை என்னிடம் கொடுங்கள்.. அவரை வேறு மாதிரி மாற்றுகிறேன் என்று சிறு வயதிலேயே பாராட்டுக்களை பெற்றார்.

வழக்கமாக கிரிக்கெட் வீரர்கள் தங்களின் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போதுதான் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் ஜாகீர் கான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரே திருமணம் செய்து கொண்டார். 2016ஆம் ஆண்டு யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹசல் கீச் திருமணம் நடைபெற்றது. அப்போது நடிகை சாகரிகா கட்கேவுடன் ஜாகீர் கான் இருந்தார்.

சக் தி இந்தியா படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்தவர் சாகரிகா கட்கே. அந்த படத்தில் கூட கிரிக்கெட் வீரரைதான் சாகரிகா காதலிப்பதாக காட்டப்படும். அதற்கேற்றபடி நிஜ வாழ்க்கையிலும் ஜாகீர் கானுடன் காதலில் இருந்தார். இவர்களின் காதலுக்கு நடிகர் அங்கத் பேடி முக்கிய காரணமாக இருந்தார். சில ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின் ஜாகீர் கான் மும்பை அணியின் நிர்வாகியாக பணியாற்றி வந்தார். அதேபோல் சாகரிகாவும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் திருமணம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அந்த குழந்தைக்கு ஃபடேசின் கான் என்று பெயரிடப்பட்டுள்ளது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஜாகீர் கான் தனது மொபையில் தோனியிடம் ஏதோ ஒன்றை காட்டிக் கொண்டிருந்தார். தற்போது ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோனியிடம் குழந்தையின் வீடியோவை காண்பித்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் தம்பதியினருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Story first published: Wednesday, April 16, 2025, 12:05 [IST]
Other articles published on Apr 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+