Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மயங்க் யாதவை ரிலீஸ் செய்த லக்னோ அணி? 8 வீரர்களை விடுவித்த LSG.. கொயங்காவின் அதிரடி முடிவு!

மும்பை: 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நெருங்கிவிட்ட நிலையில், லக்னோ அணி 8 வீரர்களை விடுவித்து, ரூ.22.95 கோடியுடன் களமிறங்க உள்ளது. லக்னோ அணியில் இருந்து ஆகாஷ் தீப், ரவி பிஷ்னாய், ஷமார் ஜோசப், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஷர்துல் தாக்கூர், ஆர்யன் ஜுயல் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரை விடுவித்துள்ளது. தொடர்ந்து காயம் அடையும் மயங்க் யாதவை ரீடெய்ன் செய்திருப்பது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

2026ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடக்க உள்ளது. இதனையொட்டி ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியால் ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் லக்னோ அணி இந்த முறை மொத்தமாக 8 வீரர்களை விடுவித்துள்ளது.

LSG Retentions and Releases

கடந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் லக்னோ அணி தடுமாறியது. அதனால் இம்முறை அதற்கேற்ப திட்டங்களை உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக ஆலோசகர் ஜாகீன் கானை நிர்வாகத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. இந்த ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக ஆர்யன் ஜுயல், டேவிட் மில்லர், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னாய், ஷமார் ஜோசப், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் முகமது ஷமி ஆகியோரை மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகளிடம் இருந்து டிரேட் மூலமாக வாங்கி இருக்கிறது. தொடர்ச்சியாக காயம் அடைந்தாலும் மயங்க் யாதவ் மீது நம்பிக்கை வைத்து ரீடெய்ன் செய்துள்ளது. முகமது ஷமியின் வரவு காரணமாக லக்னோ அணியின் பவுலிங் கூடுதல் வலிமை அடைந்துள்ளது.

அதேபோல் திக்வேஷ் ராத்தே எழுச்சி காரணமாக ரவி பிஷ்னாய் விடுவிக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் அர்ஜுன் டெண்டுல்கர் டிரேட் மூலமாக வாங்கப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. லக்னோ அணியின் கைகளில் மொத்தமாக 22.9 கோடி உள்ளது. இதனால் பேக் அப் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை லக்னோ அணி குறி வைக்கும் என்று பார்கப்படுகிறது.

லக்னோ அணியால் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள்: ரிஷப் பண்ட் (கேப்டன்), பூரன், ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், எய்டன் மார்க்ரம்ன், ப்ரீஸ்ட்கி, ஹிம்மத் சிங், மிட்சல் மார்ஷ், ஷாபாஸ் அஹ்மத், அர்ஷின் குல்கர்னி, மயங்க் யாதவ், ஆவேஷ் கான், மோசின் கான், சித்தார்த், திக்வேஷ் ராத்தே, பிரின்ஸ் யாதவ், ஆகாஷ் சிங், அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் முகமது ஷமி.

Story first published: Saturday, November 15, 2025, 17:42 [IST]
Other articles published on Nov 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+