Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

LSG vs DC: ரிஷப் பண்ட்க்கு நெர்ந்த கொடுமை.. கொஞ்சம் கூட லக் இல்ல.. புதிய இடம், பழைய முடிவு

லக்னோ: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒரு காலத்தில் டி20 கிரிக்கெட்டின் அதிரடி நாயகனாக அறியப்பட்ட ரிஷப் பண்ட், ஐபிஎல் போட்டிகளில் பட்டையை கிளப்பி வந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பல சாதனைகளை படைத்து வந்த ரிஷப் பண்ட், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் 2024 டி20 உலக கோப்பையை வென்ற ரிஷப் பண்ட், அதன் பிறகு இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

இதனால் அணிக்குள் எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்பதற்காக பண்ட், கடுமையான முயற்சிகளை ஈடுபட்டு வருகிறார். இதனால் ஐபிஎல் 2026 சீசனை பயன்படுத்தி அணிக்குள் மீண்டு வர வேண்டும் என்று அவர் முடிவு எடுத்திருந்தார். இந்த சூழலில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி அணிக்கு இடையிலான ஆட்டத்தில் பண்ட் தொடக்க வீரராக களம் இறங்கினார்.

9 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு பவுண்டரியுடன் ஏழு ரன்கள் சேர்த்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். மிட்செல் மார்ஸ் அடித்த பந்தை டெல்லி அணி வீரர் முகேஷ் குமார் பிடிக்க முற்பட்டபோது பந்து அவருடைய கையில் பட்டு ஸ்டெம்பை தாக்கியது. அப்போது கிரீஸ்க்குள் வெளியே பண்ட் நின்றதால் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார்.

இதன் காரணமாக ரிஷப் பண்ட் ஏழு ரன்களில் பெவிலியன் திரும்பினார். இது லக்னோ அணிக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியது. ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்த பிறகு ஏய்டன் மார்க்கரம், நிக்கோலஸ் பூரான்,ஆயுஷ் பதோனி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே நடுவரிசையில் களமிறங்கி வருபவர்.

ஆனால் இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கி பட்டையை கிளப்ப வேண்டும் என நினைத்தார். ஆனால் 7 ரன்களில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ரிஷப் பண்ட்க்கு அதிர்ஷ்டம் இல்லை எனக் கூறி ரசிகர்கள் தங்களது கவலையை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, April 1, 2026, 21:13 [IST]
Other articles published on Apr 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+