Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL: “இப்படி செய்வாங்கன்னு நினைக்கவே இல்லை”.. துடித்துப் போன காவ்யா மாறன்.. இரக்கமே காட்டாத பூரன்

ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் மரண அடி அடித்ததால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தவித்துப் போனார். அந்த ஆட்டத்தைப் பார்க்க முடியாமல் தலையில் கை வைத்து இருந்தார். பின்னர் பல்லைக் கடித்தபடி அந்த ஆட்டத்தைப் பார்த்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் வெளுத்து வாங்கினார் நிக்கோலஸ் பூரன். 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

LSG vs SRH IPL 2025 Nicholas Pooran s Explosive Hitting and Kavya Maran reaction

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. 300 ரன்கள் எடுப்போம் என ஹைதராபாத் அணி சவால் விட்டிருந்த நிலையில், 200 ரன்களைக் கூட எடுக்கவில்லை. அடுத்து ஆடிய லக்னோ அணியின் துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இணைந்து ஆடினர். அதில் நிக்கோலஸ் பூரன் வரிசையாக சிக்ஸர்களை விளாசினார். யார் பந்து வீசினாலும் அவர் சிக்ஸர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை. சிமர்ஜீத் சிங், முகமது ஷமி, அபிஷேக் ஷர்மா, ஆடம் ஜம்பா என அனைவரின் பந்துகளிலும் சிக்ஸர்கள் விளாசப்பட்டன.

மற்ற பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளிலும் அதிக பவுண்டரிகளை வாரி இறைத்தனர். இதனால், 8 ஓவர்களில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 111 ரன்களை எடுத்தது. நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் அரை சதம் கடந்தார். அவரது அதிரடியைப் பார்க்க முடியாமல் காவ்யா மாறன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வந்தார். தலையில் கை வைப்பதும் பற்களைக் கடிப்பதும் என அவர் பதற்றத்தில் இருந்தார்.

பின்னர் நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் மிட்செல் மார்ஷ் 52 ரன்கள் குவித்தார். இதை அடுத்து லக்னோ அணியின் வெற்றி வாய்ப்பு எளிதானது.

செய்தி சுருக்கம்:

  • நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடினார்.
  • காவ்யா மாறன் தவித்துப் போனார்.
  • லக்னோ அணி 8 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்தது.
  • பூரன் 18 பந்துகளில் அரை சதம் கடந்தார். 26 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Story first published: Thursday, March 27, 2025, 23:04 [IST]
Other articles published on Mar 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+