Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுலிங், பீல்டிங் மோசம்தான்... ஆனாலும் ஜெயிச்சுட்டோம்ல!

ராஞ்சி: சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தப்பிப் பிழைத்துத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது. வெறும் 12 ரன் வெற்றிதான் இது. பீல்டிங், பந்து வீச்சில் நேற்று சென்னை சொதப்பியது. இருப்பினும் பேட்டிங் பலத்தால் தப்பிப் பிழைத்துள்ளது.

முதல் போட்டியிலும் இப்படித்தான் பந்து வீச்சில் சொதப்பினர். நேற்றும் பந்து வீச்சுதான் கவலைக்கிடமானதாக இருந்தது. கூடவே பீல்டிங்கும் கேவலமாக இருந்தது.

பல நல்ல கேட்சுச்சுகளை மோசமான முறையில் தவற விட்டதால் ஹைதராபாத் அணி வெற்றிக்கு வெகு அருகே வரை வந்து விட முடிந்தது.

சரி வாங்க ஹைலைட்ஸ் பார்ப்போம்...

டோணி - ரெய்னா விளாசல்

டோணி - ரெய்னா விளாசல்

முதலில் பேட் செய்த சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னாவால் நல்ல விமோச்சனம் கிடைத்தது. அதிரடியாக ஆடிய ரெய்னா 57 பந்துகளில் 84 ரன்களைக் குவித்து வலு கொடுத்தார்.

ஏமாற்றிய விஜய்

ஏமாற்றிய விஜய்

முரளி விஜய் இந்த முறையும் அல்வா கொடுத்து விட்டார். முதல் போட்டியிலும் அவர் சரியாக ஆடவில்லை. நேற்றைய போட்டியிலும் அவர் வாத்து முட்டையுடன் வெளியேறினார்.

20 ஓவர்களில் 202 .. எதிர்பாராதது

20 ஓவர்களில் 202 .. எதிர்பாராதது

சென்னை அணி விளையாடியதைதப் பார்த்தபோது எங்கே பெரிய ஸ்கோரை எட்டப் போகிறது என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் ரெய்னா மற்றும் டோணி அதிரடியால் அப்படியே அலேக் ஜம்ப் செய்து 200 ரன்களைத் தாண்டி எகத்தாளமாக சிரித்தது சென்னை அணியின் ஸ்கோர். 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 202 ரன்களை எடுத்தது சென்னை.

விரட்டியடிச்சு வந்தும் முடியலையே...

விரட்டியடிச்சு வந்தும் முடியலையே...

பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி பார்த்திவ் படேல் மற்றும் ஷிகார் தவனின் சிறப்பான மற்றும் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றியை நோக்கி வேகமாகவே நகர்ந்தது. ஆனால் அந்த அணியின் இதர ஆட்டக்காரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை மட்டுமே அது எடுக்க முடிந்தது.

சத்தாய்த்த சமி

சத்தாய்த்த சமி

ஹைதரபாத் அணியின் டேரன் சமி, டெரராக ஆடினார். 25 பந்துகளை சந்தித்த அவர் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்களைக் குவித்து சென்னையை கொஞ்சம் மிரட்டிப் பார்த்தார்.

திஸராவை சூறையாடிய டோணி

திஸராவை சூறையாடிய டோணி

சென்னை அணி பேட்டிங் செய்தபோது 18வது ஓவரில் திஸரா பெரைரா வீசிய பந்துகளை டோணி சிதறடித்தார். ஒரே ஓவரில் 34 ரன்களை வாரிக் கொடுத்தார் பெரைரா. இந்த ஓவரில்தான் டோணி 5 சிக்ஸர்களை விளாசினார்.

3 ஓவருக்கு 60 ரன்கள்...

3 ஓவருக்கு 60 ரன்கள்...

மொத்தத்தில் 3 ஓவர்களை வீசிய பெரைரா 60 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.

க..க..க..போ...

க..க..க..போ...

திஸரா வீசிய பந்துகளையெல்லாம் கன கச்சிதமாக கவ்விக் கொண்டு அவற்றையெல்லாம் டோணி சிக்ஸருக்கு விரட்டிய விதத்தைப் பார்த்து ரசிகர்கள் குதூலமடைந்து போயினர்.

இஷாந்த்துக்கும் நேரம் சரியில்லை

இஷாந்த்துக்கும் நேரம் சரியில்லை

இஷாந்த் சர்மாவும் நேற்று சரியில்லை. 4 ஓவர்கள் வீசிய அவர் 40 ரன்களைக் கொடுத்து வெறும் கையுடன் திரும்பினார்.

ரெண்டு பேரும் சேர்ந்து 100

ரெண்டு பேரும் சேர்ந்து 100

இவர்கள் இருவரும் சேர்ந்து 7 ஓவர்களுக்கு 100 ரன்களை விட்டுக் கொடுத்ததால் ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவாகிப் போனது.

ரெய்னாவுக்கு ஒரு சிக்ஸர்தான்

ரெய்னாவுக்கு ஒரு சிக்ஸர்தான்

சுரேஷ் ரெய்னா 84 ரன்களைக் குவித்தாலும் அவர் அடித்தது ஒரே ஒரு சிக்ஸர்தான் என்பது ஆச்சரியமானது. அதேசமயம், 9 பவுண்டரிகளை அவர் விளாசினார்.

முரளி விஜய்க்கு 2வது வாத்து முட்டை

முரளி விஜய்க்கு 2வது வாத்து முட்டை

முதல் போட்டியிலும் முரளி விஜய் டக் அவுட் ஆகியிருந்தார். நேற்றைய போட்டியிலும் அவருக்கு முட்டைதான் கிடைத்தது.

ஹஸ்ஸி ஓ.கே...

ஹஸ்ஸி ஓ.கே...

சென்னையின் மைக்கேல் ஹஸ்ஸி 9 ரன்களில் இருந்தபோது கேட்ச ஆவதிலிருந்து தப்பினார். பின்னர் சுதாரித்து ஆடிய அவர் 23 ரன்களை சேர்த்து வெளியேறினார்.

Story first published: Friday, September 27, 2013, 11:48 [IST]
Other articles published on Sep 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+