Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs LSG: சேப்பாக்கத்தில் களமிறங்கிய தல.. டாஸ் வென்ற கேஎல் ராகுல்.. யார் முதலில் பேட்டிங்?

சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். டாஸ் போடுவதற்காக தோனி சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கிய போதே சென்னை அணி ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை தொட்டது. சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததால், இன்றையப் போட்டியில் வெற்றிபெற்று சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 6வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. கடந்த ஆண்டு எனது கடைசி ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் இருக்கும் என்று தோனி தெரிவித்திருந்தார். இதனால் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Lucknow Captain KL Rahul won the toss and choose to field against Chennai in Chepauk in IPL 2023

சென்னை அணி விளையாடிய முதல் போட்டியில் குஜராத் அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதேபோல் லக்னோ அணி விளையாடிய முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. இதனால் லக்னோ அணி தங்களது வெற்றிப் பயணத்தை தொடர தீவிரமாக முயற்சி செய்யும். இன்னொரு பக்கம் சேப்பாக்கத்தில் தங்களின் ஆதிக்கத்தை காட்ட சென்னை அணி விளையாடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது.

இந்த நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சிஎஸ்கே அணியில் ஜடேஜா, மொயின் அலி மற்றும் சான்ட்னர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் கடந்த போட்டியில் சுமாராக ஆடிய ஷிவம் துபே மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இம்பேக்ட் பிளேயராக எந்த வீரர் வருவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் லக்னோ அணியில் கடந்த போட்டியில் ஆடிய உனாத்கட் நீக்கப்பட்டு யாஷ் தாகூர் இடம்பெற்றுள்ளார். ஆனால் சுழலுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், அணியில் அமித் மிஸ்ரா இம்பேக்ட் பிளேயராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அணி விவரம்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் சஹர், மிட்சல் சான்ட்னர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்

இம்பேக்ட் பிளேயர்ஸ்: துஷார் தேஷ்பாண்டே, டுவைன் பிரெடோரியஸ் , சேனாபதி, ஷேக் ரஷீத், ரஹானே

லக்னோ அணி விவரம்: கே.எல்.ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், தீபக் ஹூடா, குருணால் பாண்டியா, கே கெளதம், மார்க் வுட், யாஷ் தாகூர், ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான்

இம்பேக்ட் பிளேயர்ஸ்: ஆயுஷ் படோனி, ஜெய்தேவ் உனாத்கட், டேனியல் சாம்ஸ், ப்ரீரெக் மன்கட், அமித் மிஸ்ரா

Story first published: Monday, April 3, 2023, 19:14 [IST]
Other articles published on Apr 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+