Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்

மும்பை: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் குளறுபடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அதிகாரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் இரு அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 1 - 1 என சமநிலையில் உள்ளது.

3வது டி20க்காக வீரர்கள் தயாராகி வரும் சூழலில் 2வது போட்டியில் நடந்த பிரச்சினை சூடுபிடித்துள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகப்படியான டேர்ன் இருந்தது.

2வது டி20 போட்டி

2வது டி20 போட்டி

அதிகப்படியான ஸ்பின் இருந்ததால் முதலில் ஆடிய நியூசிலாந்து 99 ரன்களை மட்டுமே சேர்த்தது. எளிய இலக்கு என்றாலும் இந்திய அணி பேட்டர்கள் திணறினர்.19.5 ஓவர்களில் தான் வெற்றியை பெற்றது. மொத்தம் வீசப்பட்ட 39.5 ஓவர்களில் 30 ஓவர்களை ஸ்பின்னர்கள் மட்டுமே வீசியிருந்தனர். இன்னும் 3 ஓவர்கள் வீசப்பட்டிருந்தால் உலக சாதனையே படைத்திருக்கலாம்.

கேப்டன் அதிருப்தி

கேப்டன் அதிருப்தி

இதுகுறித்து பேசியிருந்த கேப்டன் பாண்ட்யா, இந்த பிட்ச்சானது டி20க்கு உருவாக்கப்படுவதே கிடையாது. கடினமான பிட்ச்-களில் விளையாடுவது எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் பிட்ச்-ஐ உருவாக்குபவர்கள் சற்று தவறு செய்துவிட்டனர். அவர்கள் முன்கூட்டியே தயார் செய்திருக்க வேண்டும். இந்த களத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டேன் என விளாசியிருந்தார்.

புது திருப்பம்

புது திருப்பம்

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது லக்னோ மைதானத்தில் கருப்பு மண் இருந்துள்ளது. அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும். ஆனால் போட்டி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக, பிட்ச் வடிமைப்பாளரை அழைத்த இந்திய அணி நிர்வாகம், ஸ்பின்னர்களுக்கு உதவும் சிகப்பு நிற மண்ணில் பிட்ச்-ஐ உருவாக்குமாறு கோரியுள்ளனர்.

பணி நீக்கம்

பணி நீக்கம்

கடைசி நேரத்தில் பிட்ச்-ஐ மாற்றியமைத்த போது தான், பந்து மிக அதிகமாக ஸ்பின் ஆகும் வகையில் மாற்றிவிட்டனர். இதனால் பிட்ச்- உருவாக்கும் அதிகாரியை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது பிசிசிஐ. இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

Story first published: Tuesday, January 31, 2023, 15:00 [IST]
Other articles published on Jan 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+