Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி எல்லாமே அவர் தான்..கவுதம் கம்பீருக்கு பதவி உயர்வு கொடுத்த லக்னோ..இரவு தூக்கமிருக்காது என கருத்து

டெல்லி : ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பணியாற்றினார். பாஜகவை சேர்ந்த டெல்லி எம்பி ஆன கௌதம் கம்பீர்,

தற்போது அரசியலை விட கிரிக்கெட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு கம்பீர் தலைமையில் லக்னோ அணி ஐபிஎல் பிளே ஆப் சுற்று வரை சென்றது.

எனினும் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியிடம் லக்னோ அணி தோல்வியை தழுவியது.

பதவி உயர்வு

பதவி உயர்வு

இந்த நிலையில் சவுத் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள புதிய டி20 லீக் தொடரில் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி நிர்வாகம் டர்பன் அணியை வாங்கி இருக்கிறது. இந்த நிலையில் லக்னோ அணி நிர்வாகம் கௌதம் கம்பிரை குளோபல் மெண்டர் என்று பதவி உயர்வு கொடுத்திருக்கிறது.

கம்பீர் நன்றி

கம்பீர் நன்றி

இதனைத் தொடர்ந்து லக்னோ அணி தொடர்பான கிரிக்கெட் முடிவை உலக அளவில் இனி கௌதம் கம்பீர் தான் பார்த்துக் கொண்டு அணியை வழிநடத்துவார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கௌதம் கம்பீர் தம் மீது நம்பிக்கை வைத்த குளோபல் மெண்டராக பதவி கொடுத்திருக்கும் சூப்பர் ஜெயிண்ட் அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் பொறுப்பு

கூடுதல் பொறுப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்னை பொறுத்த வரைக்கும் எந்த அணியை பொறுத்த வரைக்கும் பூலோகம் எதையும் தீர்மானிக்காது. அணி வெற்றி பெற சிறந்த வழிமுறை தான் முக்கியம். தற்போது உலகளாவிய அளவில் அணியை வழி நடத்தும் பொறுப்பு என்பது எனக்கு கிடைத்தது கூடுதல் பொறுப்பு .

சர்வதேச இறக்கைகள்

சர்வதேச இறக்கைகள்

என்னுடைய உத்வேகத்திற்கு தற்போது சர்வதேச இறக்கைகள் கிடைத்துள்ளது. உலக அளவில், சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி கால் தடம் பதித்துள்ளது எனக்கு பெருமையாக இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இனி எனக்கு தூங்கா இரவுகள் காத்துக் கொண்டிருக்கிறது என்று கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, October 8, 2022, 6:30 [IST]
Other articles published on Oct 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+